For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரம்பமே ஏமாற்றம்.. தவறான ஷாட்டால் மோசம் போன ரோஹித்.. சொதப்பிய புஜாரா - கடுப்பான கோலி

டுர்ஹம்: ரசிகர்கள் இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டியை பார்த்துக் கொண்டிருக்க, அங்கு இந்திய மெயின் அணியை பாடுபடுத்தி வருகிறது இங்கிலாந்து கவுண்ட்டி அணி.

ஆம்! இலங்கையில் தற்போது நடந்து வரும் இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

அதேசமயம், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

 சைடு அணி இலங்கையில்

சைடு அணி இலங்கையில்

விராட் கோலி தலைமையிலான இந்தியாவின் சீனியர் அணி இங்கிலாந்துக்கு சென்றிருப்பதால் தான், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணியை இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முன்னிட்டு, இந்திய அணி தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. முதல் பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

 பயிற்சி போட்டி

பயிற்சி போட்டி

Chester-le-Street-ல் உள்ள Riverside மைதானத்தில் இந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. County Select XI அணியுடன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் விராட் கோலி, ரஹானே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா (c), மாயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல் (w), ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துள் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

 தடுமாறும் இந்திய வீரர்கள்

தடுமாறும் இந்திய வீரர்கள்

வில் ரோட்ஸ் தலைமையிலான கவுண்டி அணியில் புதிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் பவுலிங்கில் இந்திய அணி திணறி வருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, 33 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். மாயங் அகர்வால் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆறு பவுண்டரிகள் அழகாக அடித்தார். ஆனால், தாக்குப்பிடிக்கவில்லை. 35 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். 2 விக்கெட்டுகளையும் இங்கிலாந்தின் லிண்டன் ஜேம்ஸ் காலி செய்தார். பிறகு, புஜாராவும் 21 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 மீண்டும் தொடர்கதை

மீண்டும் தொடர்கதை

இந்திய அணி தனது முழு பலம் கொண்ட அணியுடன் விளையாடி வருகிறது. ஆனாலும், இங்கிலாந்தின் உள்ளூர் பவுலர்களிடம் தடுமாறி வருகிறது. அவர்கள் விளையாடுவதை பார்க்கையில் 2014, 2018ல் நடந்த கதை மீண்டும் தொடர் கதையாகிவிடுவோம் என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

2 அணிகள்

2 அணிகள்

இலங்கையில் விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இலங்கை சென்றிருப்பதால் தான், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணியை இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முன்னிட்டு, இந்திய அணி தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. முதல் பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

Story first published: Wednesday, July 21, 2021, 13:44 [IST]
Other articles published on Jul 21, 2021
English summary
India vs County Select XI Live score Day 1 wickets - ரோஹித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+