For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லி போட்ட அபார சதம்.. இந்தியா Vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் 2ம் நாள் ஹைலைட்ஸ்!

பர்மிங்காம்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் சிறப்பம்சமாக கோஹ்லி போட்ட அபாரமான சதம் அமைந்தது. இங்கிலாந்தில் அவர் போட்ட முதல் சதம் இது.

டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை குவித்தது. முதல் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி மேலும் 2 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

India vs eng Day 2 Top 5

தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்யை ஆடிய இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி தற்போது 22 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்ந்த டாப் 5 நிகழ்வுகள்


1) விராட் கோஹ்லியின் அபார சதம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். அவர் நேற்று 149 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 22ஆவது சதம் ஆகும். இங்கிலாந்து மண்ணில் இதுவே அவரது முதல் சதம். கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை பூர்த்தி செய்தார்.


2) சாம் கர்ரன் அபார பந்துவீச்சு

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். 20 வயதே ஆன இந்த இளம்புயல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையை சுக்கு நூறாக்கியது. முரளி விஜய்,ஷிகர் தவான் மற்றும் ராகுல் ஆகியோரது விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.


3) அஸ்வின் அபாரம்

13 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்யை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். முதல் இன்னிங்ஸ்யை போலவே அதே போல இந்த இன்னிங்சிலும் குக் இவரால் வீழ்த்தப்பட்டார். அஸ்வின் குக் விக்கெட்டை வீழ்த்துவது இது 9ஆவது முறையாகும். குக் விக்கெட் வீழ்ந்தவுடன் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.


4) இங்கிலாந்தின் மோசமான ஸ்லிப் பீல்டிங்

இங்கிலாந்து அணி ஸ்லிப்பில் பல கேட்ச்களை கோட்டை விட்டது. குறிப்பாக விராட் கோஹ்லிக்கு அவர்கள் நழுவ விட்ட கேட்ச்கள் ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக மாற்றி விட்டது என்றால் மிகையில்லை. விராட் கோஹ்லி ரன் கணக்கை துவங்கும் முன்னரே அவர் கொடுத்த கேட்சை கை நழுவ விட்டனர் இங்கிலாந்து வீரர்கள்


5) ஸ்டோக்சின் 100ஆவது டெஸ்ட் விக்கெட்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை வீழ்த்திய போது டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய பெருமையை பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் 2500+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Story first published: Friday, August 3, 2018, 9:15 [IST]
Other articles published on Aug 3, 2018
English summary
India vs eng Day 2 Top 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+