For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி vs ஜேம்ஸ் ஆண்டர்சன்.. பரபரப்பாக பேசப்படும் காம்போ.. டெஸ்ட் போட்டியில் உள்ள சுவாரஸ்யம்!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் மற்றும் விராட் கோலி காம்போ கவனம் பெற்றுள்ளது.

இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி முதல் பிர்மிங்கம் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விராட் கோலி ஃபார்ம்

விராட் கோலி ஃபார்ம்

இந்திய அணியை பொறுத்தவரையில் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடியவர் விராட் கோலி தான். ஏனென்றால் தற்போதைய அணியில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்களை அடித்தவர் அவர் தான். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்ம் அவுட்டில் உள்ள கோலிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் பெரிய கண்டம் காத்துள்ளது.

விராட் கோலி vs ஆண்டர்சன்

விராட் கோலி vs ஆண்டர்சன்

இங்கிலாந்து அணி பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் விராட் கோலிக்கும் பெரிய யுத்தமே களத்தில் நடைபெறும். கடந்த 2014ம் ஆண்டு கோலி 10 இன்னிங்ஸில் 134 ரன்களை மட்டுமே அடித்தார். இந்த 5 போட்டிகளில் 4 முறை ஆண்டர்சன் பவுலிங்கில் விக்கெட் ஆனார். ஆனால் 2018ம் ஆண்டு கோலி அட்டகாச கம்பேக் தந்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 593 ரன்களை விளாசினார். மேலும் ஆண்டர்சன் பவுலிங்கில் அவுட்டாகவே இல்லை.

மீண்டும் பரிதாபம்

மீண்டும் பரிதாபம்

இதன் பின்னர் தான் கோலியின் ஃபார்ம் அவுட் ஆரம்பமானது. கடந்தாண்டு நடைபெற்ற 4 போட்டிகளில் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே கோலி விக்கெட் ஆனார். 3வது டெஸ்டிலும் அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்திருந்ததால், கோலியின் பலவீனத்தை ஆண்டர்சன் நன்கு அறிந்துவைத்துள்ளார்.

சரியான போட்டி

சரியான போட்டி

40 வயதை நெருங்கிவிட்ட ஆண்டர்சன், தற்போதும் அட்டகாசமான ஃபார்மில் பந்துவீசி வருகிறார். மற்றொரு புறம் விராட் கோலி நல்ல ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்குள் வந்துள்ளார். எனவே இவர்களின் சண்டை எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Thursday, June 23, 2022, 16:37 [IST]
Other articles published on Jun 23, 2022
English summary
Virat kohli vs James Anderson ( விராட் கோலி vs ஜேம்ஸ் ஆண்டர்சன் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சண்டை கவனம் பெற்றுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+