IND vs ENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த டெஸ்டில் ஒரு பேட்ஸ்மேன் 150 ரன்களுக்கு மேல் எடுத்தார்.
மற்றொரு பேட்ஸ்மேன் 3 ரன்களில் சதம் எடுப்பதை தவற விட்டார்.
இரண்டு விக்கெட் கீப்பர்கள், ஒரு இன்னிங்சை துவக்கினார்கள். அதில் ஒருவர் 164 பந்துகள் ஆடி, அந்த இன்னிங்சில் அதிகபட்ச ரன்களை எடுத்தார்.ஒரு இன்னிங்சில் மூன்று ஆட்டக்காரர்கள் எடுத்த ரன்கள் தலா 7.

ஒரு டீம் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும் தான் விளையாடியது.
அந்த டீமின் பவுலர் மேட்சில் எடுத்தது 7 விக்கெட்டுகள்.
அவற்றில் 6 விக்கெட்டுகளை, ஒரே ஒரு இன்னிங்சில் வீழ்த்தி அசத்தினார்.எதிராணியில் ஒரு ஸ்பின் பவுலர் எடுத்த விக்கெட்டுகள் 5.
டாஸ் வென்று பேட்டிங் விளையாட துவங்கிய இந்திய டீமின் ஆட்டம் போற்றும்படி இல்லை. இங்கிலாந்து டீமின் வேக பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறினர்.சீதோஷ்ண நிலைமை, வேக பந்துகளின் வேகம், ஸ்விங் ஆன நேர்த்தி இவை எல்லாம் இங்கிலாந்து டீமிற்கு சாதகமாக அமைந்தன.திலிப் ஸர்தேசாய்யும், ஃபரூக் என்ஜினீயரும் இந்திய பேட்டிங்கை துவக்கினர்.இரண்டு பவுண்டரிகள் அடித்த என்ஜினீயர், முதலில் அவுட் ஆனார்.டேவிட் பிரவுன் வீசிய பந்தில், கேட்ச் பிடித்தவர் முரே. 8 ரன்கள். ( 2 x 4)
12 - 1
திலிப் ஸர்தேசாய், அஜித் வடேகர் ஜோடி சேர்ந்து விளையாடினார்கள். திலிப் ஸர்தேசாய் 28 ரன்கள். ( 4 x 4 )சந்து போர்டே 0 போல்ட் ஸ்னோ.
மன்சூர் அலி கான் பட்டோடி 5
ருசி சுர்த்தி 6
சுப்ரமன்யா 0
குந்தேரன் 20
பிரசன்னா 17
பிஷன் பேடி 5
சந்திரசேகர் : 2
அஜித் வடேகர் இந்த இன்னிங்சில் அதிகமான
ரன்களை எடுத்தார். 97 பந்துகள் எதிர்கொண்டு 7 வதாக அவுட் ஆனார். எடுத்த ரன்கள் 57. ( 9 x 4 ) இல்லிங்ஒர்த் கேட்ச் பிடிக்க டி ஓலிவேறா பந்தில்.
112 - 7
இந்திய டீம் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இவர்கள் ஆடியது மொத்தம் 55.4 ஓவர்கள்.
மொத்தம் அடித்தது 24 பவுண்டரிகள்.இங்கிலாந்து பவுலர்கள் அபாரமாக பந்து வீசினார்கள்.
ஜான் ஸ்னோ 3 - 49
டேவிட் பிரவுன் 3 - 61
டி ஓலிவேறா 2 - 38
ரே இல்லிங்ஒர்த் 1 - 0
முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து டீம் வலுவான நிலையில் இருந்தனர்.
ஸ்கோர் 107 - 2.
கென் பாரிங்டன் 54*
முன்னதாக தங்கள் பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்து டீம் நன்றாக விளையாடினர்.
ஜான் எட்ரிச், சுர்த்தி வீசிய பந்தில் அவரே கேட்ச் பிடிக்க அவுட்.
ஜான் எட்ரிச் ரன்கள் 12.
46 - 1.
கென் பாரிங்டன் திறமையாக விளையாடினார்.
இவர் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.சந்திரசேகர் வீசிய பந்தில் டென்னிஸ் அமிஸ் அவுட். ரன்கள் 29 ( 97 பந்துகள் 4 x 4)
107 - 2
கென் பாரிங்டன்,
டாம் கிரேவினேயும் ரன்களை அதிகரித்த வண்ணம் இருந்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து 78 ரன்கள் சேர்த்தனர்.
பாரிங்டன் 225 பந்துகள் ஆடி எடுத்த ரன்கள் 97.
( 10 x 4 )
சந்திரசேகர் இவரது விக்கெட்டையும் வீழ்த்தினார்.டாம் கிரேவினே தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டு இருந்தார்.அவருக்கு கம்பனி கொடுத்தவர், டி ஓலிவேறா.
இருவரும் ஆட்ட முடிவில் 67 ரன்கள் சேர்த்தனர்
252 - 3
டாம் கிரேவினே 74* ,
டி ஓலிவேறா 27*
மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. அதைப் போல் இங்கிலாந்து டீமின் ஆட்டமும்.
இங்கிலாந்து டீமின் ஸ்கோர் உயர்ந்துக் கொண்டே இருந்தது.சந்திரசேகர் டி ஓலிவேறா விக்கெட்டையும் கைப்பற்றினார். அவர் வீசிய பந்தின், கேட்சைப் பிடித்து. ரன்கள் 33 ( 99 பந்துகள் 4 x 4 )
307 - 4
பார்ட்னர்ஷிப் 122 ரன்கள்.
கேப்டன் பிரைன் க்ளோஸ் 7 ரன்கள் எடுத்து பிரசன்னாவின் பவுலிங்கில், போர்டே பிடித்த கேட்சில் அவுட்.
334 - 5.
சதம் எடுத்த டாம் கிரேவினே, தனது அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்.308 பந்துகளை எதிர் கொண்ட அவர் அடித்த ரன்கள் 151 ( 20 x 4 &
2 x 6 )
பேடியின் பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.
359 - 7
மற்ற ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து டீம் ஆல் அவுட் 386.இந்திய பவுலர்கள் 154.2 ஓவர்கள் பந்து வீசினார்கள்.
இந்திய பவுலர்கள்
ருசி சுர்த்தி 1 - 67
பேடி 3 - 68
பிரசன்னா 1 - 78
சந்திரசேகர் 5 - 127
நான்காம் நாள் ஆட்டம் ஒரு நாள் ஓய்வு தினத்திற்கு அடுத்த நாள் துவங்கியது.
புத்தி குந்தேரன், பரூக் என்ஜினீயர் ( இரண்டு விக்கெட் கீப்பர்கள்) இந்திய டீமின் இரண்டாவது இன்னிங்சை, துவக்கினார்கள்.முதல் இன்னிங்சில் எடுத்த மாதிரி இந்த இன்னிங்சிலும் 8 ரன்களுக்கு என்ஜினீயர் அவுட். அமிஸ் பிடித்த கேட்ச். ஸ்னோ வீசிய பந்து. 8 - 1
குந்தேரன், வடேகர் ஜோடி சேர்ந்தனர். பொறுமையாக ஆடிக் கொண்டு இருந்தார்கள்.
52 ரன்கள் அதிகரித்தனர். வடேகர் இல்லிங்ஒர்த் பவுலிங்கில் போல்ட் ஆனார்.
69 பந்துகள் ஆடிய இவர் எடுத்த ரன்கள் 19 ( 3 x 4 )
60 - 2
சந்து போர்டே 1
பட்டோடி 5
சூர்த்தி 0
சுப்ரமன்யா 1
பிரசன்னா 0
பேடி 11
சந்திரசேகர் 3
ஸர்தேசாய் காயம் காரணமாக விளையாடவில்லை .
ஓபன் செய்த புத்தி குந்தேரன், கிட்டத்தட்ட கடைசி வரையில் நின்று, தாக்கு பிடித்து விளையாடினார்.
எட்டாவதாக அவுட் ஆனார். ரன்கள் 47 (164 பந்துகள் 6 x 4 )
101 - 8
இந்திய டீம் ஆல் அவுட் 110 ரன்கள்.
இங்கிலா ந்து டீம் பவுலர்கள் வீசியது 56.3 ஓவர்கள்.
இங்கிலாந்து டீம் பவுலிங்
ஜான் ஸ்னோ 1 - 12
பிரைன் க்ளோஸ். 2 - 28
ரே இல்லிங்ஒர்த் 6 - 29
மேட்சின் பேட்ஸ்மேன்
டாம் கிரேவினே
புத்தி குந்தேரன்
மேட்சின் பீல்டர்
ரே இல்லிங்ஒர்த்
பி எஸ் சந்திரசேகர்
மேட்சின் பில்டர்
ஜான் முரே
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.22 - 26, ஜூன் 1967
மேட்ச் நான்கே நாட்களில் முடிவடைந்தது.இங்கிலாந்து டீம் ஒரு இன்னிங்ஸ் 124 ரன்கள், வித்தியாசத்தில் வென்றது.
வாசுதேவன் , பெங்களூரு