IND vs ENG : அறிமுக இந்திய கிரிக்கெட் வீரர் யஜுர்விந்திர சிங் பீல்டராக 7 கேட்சுக்கள் பிடித்து சாதனை புரிந்த டெஸ்ட் மேட்ச் இது.1977 ல் இங்கிலாந்து, இந்தியா டீம்களுக்கு இடையே பெங்களூர் ( இன்றைய பெங்களூரு) டெஸ்ட்.மூன்று பவுலர்கள் ஒரு இன்னிங்சில் தலா 6 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.பாப் வில்லீஸ், பி எஸ் சந்திரசேகர், பி எஸ் பேடி மேட்சில் அதிகமான விக்கெட்டுக்களை எடுத்தவர்கள்..
மேட்சில் அதிகமான விக்கெடுக்களை எடுத்தவர்கள்.
பி எஸ் சந்திரசேகர் 9
பி எஸ் பேடி 7
பாப் வில்லீஸ் 8

ஒரு இன்னிங்சில் அதிகமான ரன்கள் எடுத்தவர்கள்.
டென்னஸ் அமிஸ் 82
ஆலன் நாட் 81*
ஜி ஆர் விஸ்வநாத் 79*
சூரிந்தர் அமர்நாத் 63
இந்த டெஸ்டில் எடுக்கப்பட்ட ரன்கள் சில ஒன்றிற்கும் மேல் இருந்தன
0 (5 ) 1 ( 2 ) 4 ( 3 ) 8 ( 2 ) 9 ( 2 ) 10 ( 4 ) 12 ( 4 ) 13 ( 2 ) 14 ( 2 ) 15 ( 3 ) 20 ( 2 )
அதிகமான பவுண்டரிகள் எடுத்தவர்கள்
டென்னஸ் அமிஸ் 11
சுனில் கவாஸ்கர் 10
சூரிந்தர் அமர்நாத் 10
ஆலன் நாட் 13
ஜி ஆர் விஸ்வநாத் 8
சயத் கீர்மானி 12
பவுண்டரிகள் 89
இந்தியா 51
இங்கிலாந்து 38
இந்தியா முதல் இன்னிங்ஸ்அன்ஷுமான் கெய்க் வாட், சூரிந்தர் அமர்நாத் ஜோடி 93 ரன்கள் சேர்த்தனர்.இரண்டாவது இன்னிங்ஸ் சூரிந்தர் அமர்நாத் சுனில் கவாஸ்கர், 49 ரன்கள் உயர்த்தினர்.ஜி ஆர் விஸ்வநாத்,சயத் கீர்மானி சேர்த்தது 34 ரன்கள் ஜி ஆர் விஸ்வநாத், கார்ஸன் காவ்ரி உயர்த்தியது 34 ரன்கள்.
ஜி ஆர் விஸ்வநாத், பிஷன் பேடி ஜோடி சேர்த்தது 34 ரன்கள்.இங்கிலாந்து
முதல் இன்னிங்ஸ்டென்னஸ் அமிஸ்,ஆலன் நாட் ஜோடி அதிகரித்தது 70 ரன்கள்.
இரண்டாவது இன்னிங்ஸ் ஆலன் நாட், கிறிஸ் ஓல்ட் ஜோடி 44 ரன்கள் சேர்த்தனர்.
ஆலன் நாட், ஜான் லீவர் ஜோடி சேர்த்தது 43 ரன்கள்.
இந்திய டீம் முதல் இன்னிங்க்சில்சூரிந்தர் அமர்நாத் தவிர சிறப்பாக விளையாடியவர்கள்
அன்ஷுமான் கெய்க்வாட் 39 , சயத் கீர்மானி 52, பிரிஜேஷ் பட்டேல் 23
இங்கிலாந்து வேக பந்து வீரர் பாப் வில்லீஸ் பந்துக்களை நம் வீரர்களுக்கு எதிர் கொள்வது கடினமாகத்தான் இருந்தது. 6 - 53 இவர் மிக சிறப்பாக பந்துக்கள் வீசினார்.
டோனி கிரெய்க் அவர் பங்கிற்கு பந்து வீசி விக்கெட்டுக்கள் எடுத்தார். 2 - 44
இரண்டாவது இன்னிங்சில் ஜி ஆர் விஸ்வநாதை தவிர சுனில் கவாஸ்கர் சிறப்பான ஆட்டத்தை வெளி படுத்தினார். 50 ரன்கள்.
பாப் வில்லீஸ் 2 - 47.
அண்டர்வுட் அருமையாக பவுலிங் போட்டு விக்கெடுக்கள் எடுத்தார்.
4 - 76.
இங்கிலாந்து டீம்முதல் இன்னிங்ஸ்டென்னஸ் அமிஸ் தவிர முக்கியமாக விளையாடியவர், ஆலன் நாட் 29 ரன்கள். பவுலிங்கில் அசத்திய இந்திய பவுலர் பி எஸ் சந்திரசேகர்.
6 - 76
மூன்று ஸ்பின்னர்களும் தங்கள் திறமையான பந்து வீச்சால் அழுத்தம் கொடுத்தனர்.
இங்கிலாந்து டீம் 200 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும்.இ ஏ எஸ் பிரசன்னாவும் நேர்த்தியாக பந்து வீசினார். 3 - 47
பிஷன் பே டி 1 - 29
இரண்டாவது இன்னிங்ஸ்
ஆலன் நாட் தவிர கேப்டன் டோனி க்ரெய்க் நின்று ஆடினார். 31 ரன்கள். பவுலிங்கில் இந்த முறை அசத்தியவர் பிஷன் பேடி. இவரது சூழல் பந்துக்கள் எதிரணியினரை தவிக்க விட்டன. ஆலன் நாட் மிகவும் சிறப்பாக ஆடி கடைசி வரையில் அவுட் ஆகவில்லை.
பிஷன் பேடி 6 - 71 சந்திரசேகர் இந்த இன்னிங்சிலும் அவரது அருமையான பவுலிங்கை தொடர்ந்தார். 3 - 55
கார்ஸன் காவ்ரி 1 - 4
இந்திய டீமின் ஸ்கோர்
253 259 / 9 டிக்ளர்
இங்கிலாந்து டீமின் ஸ்கோர்
195 177
இந்திய டீம் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
வாசுதேவன், பெங்களூரு