Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டிய தாண்டி அவரு நிறைய செஞ்சிருக்காரு..என்னா மனுஷன்யா,ஒருவருக்கு மட்டும் ஸ்பெஷல் நன்றி கூறிய கோலி

புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதற்காக ஒருவருக்கு மட்டும் ஸ்பெஷல் நன்றிகளை கோலி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி திடீர் திருப்பத்தால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்தாலும், ஷிகர் தவானுக்கு ஸ்பெஷல் நன்றிகளை தெரிவித்துள்ளார் கோலி.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை குவித்தது. சிறப்பாக பேட்டிங் செய்த ஷிகர் தவான் 98 ரன்களும், கோலி 56 ரன்கள், கே.எல். ராகுல் 62* ரன்கள் மற்றும் அறிமுக வீரர் க்ருணால் பாண்டியா 58* ரன்களும் எடுத்து அணிக்கு உதவினர்.

அசத்தல்

அசத்தல்

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களை மட்டுமே அடித்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க வீரர்கள் ராய் - பேர்ஸ்டோ ஜோடி 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்ததால் சவாலாக இருந்த சூழலில் அறிமுக வீரர் பிரஷித் கிருஷ்ணா அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்தது சரிந்தது. இந்திய அணியில் பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டும், ஷர்துல் 3 விக்கெட், புவனேஷ்குமார் 2, க்ருணால் பாண்டியா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 94 ரன்களும், ராய் 46 ரன்களும் எடுத்தனர்.

கோலி பாராட்டு

கோலி பாராட்டு

இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் கோலி, இந்திய அணி பெரியளவில் நல்ல வெற்றிகளை பெற்றதில்லை. ஆனால் இது ஒரு இனிமையான வெற்றி. முதலில் கொஞ்சம் அதிகளவில் ரன்கள் போய்விட்டன. ஆனால் இந்திய பவுலர் மீண்டும் கம்பேக் கொடுத்தனர். ப்ரஷித், க்ருணால், ஷர்துல் புவனேஷ்வர் குமார் ஆகியோர் அசரடித்தனர். அணி மொத்தமாக சிறந்த ஆட்டத்தை கொடுத்தனர் என தெரிவித்தனர்.

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

ஆட்டத்தில் 98 ரன்கள் அடித்த ஷிகர் தவானுக்கு கோலி ஸ்பெஷல் வாழ்த்து தெரிவித்தார். முதல் டி20க்கு பிறகு பெரியளவில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இருப்பினும் அவர் அனைத்து போட்டிகளிலும் வீரர்களுக்கு தண்ணீர், குளிர்பானம் கொண்டு வருவது, உற்சாகப்படுத்துவது என இருந்தார். இது ஒரு சிறந்த தன்மை. அவர் இந்த போட்டியில் மீண்டும் ஆட்டத்தை நிரூபித்துவிட்டார். ஆட்டத்தை தாண்டி அணிக்கு அவரின் பங்களிப்பு மிகப்பெரிது. அதே போல கே.எல்.ராகுல் நல்ல கம்பேக் கொடுத்துள்ளார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 24, 2021, 9:03 [IST]
Other articles published on Mar 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+