சதத்தில் சச்சினையே நெருங்கிட்டார்... கோலிக்கு இன்று ஜாக்பாட் வாய்ப்பு.. 2 ஜாம்பவான்களை மிஞ்சலாம்
புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கேப்டன் கோலி, இரண்டு ஜாம்பவான்களின் சாதனைகளை சமன் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடர் இன்று புனேவில் தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டது.
இந்நிலையில் டி20 தொடரில் கலக்கிய கேப்டன் விராட் கோலி, சதமடிப்பதில் சச்சினின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நடைபெற்று முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி 3 அரை சதங்களுடன் 231 ரன்களை குவித்தார். இந்நிலையில் இன்று நடைபெறவிருக்கும் ஒரு நாள் போட்டியில் சதமடித்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக சதமடித்த இந்தியர்கள் பட்டியலில் சச்சினை சமன் செய்யலாம். சச்சின் 20 சதங்கள் அடித்துள்ளார். கோலி 19 சதங்களுடன் உள்ளார்.
இதே போல கோலி இந்த சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் முறியடிக்கலாம். சர்வதேச அளவில் அதிக சதமடித்த கேப்டன்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங் மற்றும் கோலி இருவரும் 41 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் கோலி சதமடித்தால் ரிக்கி பாண்டிங் 2ம் இடத்திற்கு தள்ளப்படுவார்.


Click it and Unblock the Notifications