Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 1st ODI: மழை பெய்யுமா? நாக்பூர் வானிலை பவுலிங் செய்யும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

நாக்பூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் போது வானிலை எப்படி இருக்கும்? மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி பார்க்கலாம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளன.

இந்த தொடரின் முதல் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. 1 சதவீதம் மட்டுமே மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. அதனால், போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

India vs England 1st ODI Weather report of Nagpur Vidharba Cricket Association stadium

மேலும், பகல் நேரத்தில் அங்கு 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்றும், இரவு நேரத்தில் அது 18 டிகிரி செல்சியஸ் ஆக குறையும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதம் 46 சதவீதத்திற்கு அதிகமாக செல்லாது. எனவே, இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணிக்கு பனிப்பொழிவு பெரிய சிக்கலை ஏற்படுத்தாது.

எனவே, இந்த போட்டியில் முதலில் பவுலிங் செய்தாலும் இரண்டாவது பவுலிங் செய்தாலும் அதில் பெரிய மாறுபாடு இருக்காது வானிலை இந்தப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது இந்த மைதானம் பேட்டிங்கிற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும். வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள முதல் ஒருநாள் போட்டிக்கான அணி விவரம் -

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ஹாரி ப்ரூக், பென் டக்கெட், ஜோ ரூட், ஃபில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜேக்கப் பெத்தேல், ப்ரைடன் கார்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சாகிப் மஹ்மூத், அடில் ரஷீத், மார்க் வுட்.

Story first published: Thursday, February 6, 2025, 9:11 [IST]
Other articles published on Feb 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+