Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG- முதல் டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன் என்ன? யாருக்கு எல்லாம் வாய்ப்பு?

கொல்கத்தா : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி வரும் புதன்கிழமை கொல்கத்தா நகரில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இந்த டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த சூழலில் யார் யாருக்கு முதல் டி20 போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மாவும் சஞ்சு சாம்சனும் விளையாட போகிறார்கள்.

இதில் சஞ்சு சாம்சன் நல்ல பார்மில் உள்ள நிலையில் அபிஷேக் ஷர்மா தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். மூன்றாவது வீரராக திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். திலக் வர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

நான்காவது இடத்தில் கேப்டன் சூரியகுமார் விளையாடக்கூடும். சூரியகுமார் யாதவ் கடந்த சில இன்னிங்ஸ்களாக டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வருவதால் தற்போது அவருக்கும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஐந்தாவது வீரராக ஹர்திக் பாண்டியா விளையாட கூடும்.

ஆறாவது வீரராக நிதிஷ் குமார் ரெட்டி அல்லது ரிங்கு சிங் ஆகிய இருவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது வீரராக இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். எட்டாவது வீரராக வாஷிங்டன் சுந்தருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.

ஒன்பதாவது வீரராக வேக பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங்கும், பத்தாவது வீரராக முகமது ஷமியும் பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடும். 11 வது வீரராக வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ind vs eng 1st T2O

இதனால் இந்திய அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆல்ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஆல்ரவுண்டர் சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் என காம்பினேஷனில் இந்தியா விளையாடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிளேயிங் லெவன் கணிப்பு : 1, அபிஷேக் சர்மா, 2, சஞ்சு சாம்சன், 3, திலக் வர்மா, 4. சூர்யகுமார், 5, ஹர்திக் பாண்டியா, 6, நிதிஷ் குமார் ரெட்டி/ரிங்கு சிங், 7, அக்சர் பட்டேல் 8, வாசிங்டன் சுந்தர், 9,வருண் சக்ரவர்த்தி, 10, ஆர்ஸ்தீப் சிங், 11, முகமது ஷமி

Story first published: Monday, January 20, 2025, 13:45 [IST]
Other articles published on Jan 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+