Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டி முடிந்தவுடன் முதல் பதிவு.. பவுலர்களை பாராட்டித்தள்ளிய கோலி.. ஆனால் பந்துவீச்சுக்காக இல்லை!

நாட்டிங்ஹம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிக்கு அருகில் இருந்த நிலையில் போட்டி டிராவானது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

Recommended Video

India Dominate Rain-Curtailed Day, England Trail By 70 | Oneindia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹம் நகரின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.

4 நாட்களின் முடிவிலும் இரு அணிகளுமே சம பலத்துடன் மோதி வந்ததால் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் 5ம் நாள் ஆட்டத்தில் மழைக் குறுக்கிட்டு மொத்த ஆட்டமும் கைவிடப்பட்டது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன் பின்னர் களமிறங்கிய அந்த அணியில் 183 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகளும் ஷமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அதிகபட்சமாக 84 ரன்கள் அடித்தார். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அரைசதம் (56 ரன்கள்) விளாசினார்.

பேட்டிங்

பேட்டிங்

இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை வகித்தது. இதன் பின்னர் 2வது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ராரி பேர்ன்ஸ் 18 ரன்களும், சிப்லே 28 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட், பேர்ஸ்டோ ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். கேப்டன் ஜோ ரூட் 14 பவுண்டரிகளுடன் சதம் (109) அடித்து அசத்தினார்.பேர்ஸ்டோ 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

போட்டி டிரா

போட்டி டிரா

இந்தியா ஏற்கனவே 95 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்த போது 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வெற்றியை தீர்மாணிக்கும் 5வது நாள் ஆட்டம் இன்று தொடங்கவிருந்தது. ஆனால் மழைக்குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் இறுதி வரை போட்டி தொடங்காததால் ஆட்டம் டிரா ஆனது.

கேப்டன் கோலி

கேப்டன் கோலி

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் விராட் கோலி, முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு டெயில் எண்டர்ஸின் பேட்டிங் மிக முக்கியமானதாக இருந்திருக்கும் என பாராட்டியுள்ளார். எங்களின் குறிக்கோள் வெற்றி அடைந்தது. எங்களின் பந்துவீச்சாளர்கள் 3 வார கடின உழைப்புக்கு பின்னர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் முதலில் 40 ரன்கள் லீட் எடுக்க பேசி வந்தோம். இறுதியில் அது 95 ரன்களாக மாறியது. அந்த ரன்கள் மிகவும் முக்கியமான ஒன்று. அது இந்த போட்டியில் முக்கியமான பகுதியாக பார்க்கப்பட்டிருக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்வதே எங்கள் பலம்

 சர்ப்ரைஸ் பார்ட்னர்ஷிப்

சர்ப்ரைஸ் பார்ட்னர்ஷிப்

முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா அவுட்டான பிறகு இந்தியா விரைவில் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு பெரும் சர்ப்ரைஸாக, கடைசி விக்கெட்டுக்கு சிராஜ் - பும்ரா கூட்டணி 33 ரன்கள் எடுத்தது. பும்ரா 28 ரன்களும், சிராஜ் 7 ரன்களும் எடுத்தனர். இந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லீட் கிடைத்தது. இறுதியில் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 95 ரன்கள் லீட் கிடைத்தது.

 அடுத்த டெஸ்ட்

அடுத்த டெஸ்ட்

தொடர்ந்து பேசிய கேப்டன் கோலி, நாட்டிங்ஹம் களம் மற்றும் வேகம் மிகச்சிறப்பாக இருந்தது. இந்த ப்ளேயிங் 11 தான் எங்களின் சிறந்ததாக இருக்கும். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டால் அது எப்போதுமே ப்ளாக் பஸ்டராக இருக்கும் அடுத்த டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கியுள்ளோம் எனக்கூறியுள்ளார்.

Story first published: Monday, August 9, 2021, 7:33 [IST]
Other articles published on Aug 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+