Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கம்பேக்" கொடுத்த இந்தியா... 4ம் நாள் ஆட்டத்தில் இங்கி, திணறல்.. வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

நாட்டிகம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Recommended Video

IND vs ENG 1st Test: 3 Highlights from Nottingham | Root and Kohli

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வலுவான நிலையில் இந்தியா

வலுவான நிலையில் இந்தியா

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 36 ரன்களுக்கு சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த சட்டீஸ்வர் புஜாரா ( 4 ), கோலி (0),ரஹானே (5) ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனால் தத்தளித்து வந்த இந்திய அணியை கே.எல்.ராகுல் தூக்கி நிறுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 84 ரன்களை சேர்த்தார். இதன் பின்னர் வந்த பண்ட் 25 ரன்களும், ஜடேஜா 56 ரன்களும் எடுக்க இந்திய அணி சற்று வலுவான நிலைக்கு திரும்பியது.

 சர்ப்ரைஸ் பார்ட்னர்ஷிப்

சர்ப்ரைஸ் பார்ட்னர்ஷிப்

இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு பெரும் சர்ப்ரைஸாக, கடைசி விக்கெட்டுக்கு சிராஜ் - பும்ரா கூட்டணி 33 ரன்கள் எடுத்தது. பும்ரா 28 ரன்களும், சிராஜ் 7 ரன்களும் எடுத்தனர். இந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லீட் கிடைத்தது. இறுதியில் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 95 ரன்கள் லீட் கிடைத்தது. 98 ரன்கள் பின்னடைவு உடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 25 ரன்கள் எடுத்தபோது 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 4வது நாள் ஆட்டம்

4வது நாள் ஆட்டம்

இந்நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சற்று அவசரப்பட்டு விக்கெட்களை பறிகொடுத்த இங்கிலாந்து, 2வது இன்னிங்ஸில் மிகப்பொறுமையான தொடக்கத்தை கொடுத்தது. தொடக்க வீரர்கள் பேர்ன்ஸ் 49 பந்துகளை சந்தித்து 18 ரன்களும், சிப்லே 133 பந்துகளை சந்தித்து 28 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த கேப்டன் ஜோ ரூட் அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடித்து அசத்தினார். அவர் 172 பந்துகளில் 109 ரன்களை குவித்தார்.

குறைந்த இலக்கு

குறைந்த இலக்கு

இவரின் பின்னால் வந்த பேர்ஸ்டோ 30 ரன்களும், லாவ்ரன்ஸ் 25 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டரை முடித்துவிட்டதாக பெருமூச்சு விட்ட நேரத்தில் லோ ஆர்டரில் இருந்த ஜாஸ் பட்லர் மற்றும் சாம் கரண் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய சாம் கரண் 32 ரன்களும், பட்லர் 17 ரன்களும் எடுத்தனர். இதனால் இறுதியில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி ஏற்கனவே 95 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. '

4ம் நாள் முடிவு

4ம் நாள் முடிவு

குறைந்த இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 26 ரன்களுக்கு பிராட் பந்துவீச்சில் வெளியேறினார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா - புஜாரா ஜோடி பொறுமையாக ரன்களை சேர்த்து வருகின்றனர். இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்த போது 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் தேவை.

Story first published: Sunday, August 8, 2021, 14:34 [IST]
Other articles published on Aug 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+