Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பிக்கையுடன் காத்திருந்த ரசிகர்கள்.. கருணையே காட்டாத மழை.. முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது!

நாட்டிங்ஹம்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக சமனில் முடிவடைந்தது.

Recommended Video

Ind Vs Eng Test ends in a draw due to persistent rain on final day | Oneindia Tamil

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹம் நகரின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டம் கடைசி கட்டத்தை எட்டி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் 5ம் நாளான இன்று தொடக்கம் முதலே மழைக்குறுக்கிட்டு பாதிப்பு ஏற்பட்டது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய பந்துவீசிய இந்திய பவுலர்கள் பும்ரா மற்றும் ஷமி முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அதிகபட்சமாக 84 ரன்கள் அடித்தார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து சிறப்பாக ஆடிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அரைசதம் (56 ரன்கள்) விளாசினார்.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

முதல் இன்னிங்ஸில் சற்று அசால்டாக விளையாடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்தது. ஆனால் 2வது இன்னிங்சில் சற்று சாமர்த்தியமாக செயல்பட்டு மிகப்பொருமையாக ரன்களை சேர்த்துள்ளது. தொடக்க வீரர்கள் ராரி பேர்ன்ஸ் 18 ரன்களும், சிப்லே 28 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட், பேர்ஸ்டோ ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். கேப்டன் ஜோ ரூட் 14 பவுண்டரிகளுடன் சதம் (109) அடித்து அசத்தினார்.பேர்ஸ்டோ 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்தார்.

போட்டி இலக்கு

போட்டி இலக்கு

இறுதியில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ஏற்கனவே 95 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்த போது 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வெற்றியை தீர்மாணிக்கும் 5வது நாள் ஆட்டம் இன்று தொடங்கவிருந்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்திய அணி இன்னும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் இருக்கும் நிலையில் 5ம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக தொடங்கவே இல்லை. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்க வேண்டிய இந்தப்போட்டி நீண்ட நேரமாக தொடங்கப்படாமலேயே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் இனி ஆட்டம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

வானிலை நிலவரம்

வானிலை நிலவரம்

மாலை 6.30 மணி அளவில் மழைப்பொழிவு குறைந்து காணப்பட்ட சூழலில் அதிகாரிகள் ஆய்வு நடத்த முடிவெடுத்தனர். ஆனால் ஆய்வுக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக மீண்டும் மழைப்பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. எனினும் அந்நாட்டின் வானிலை அறிக்கைப்படி இன்று முழுவதும் மழை இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி டிரா

போட்டி டிரா

இந்நிலையில் போட்டி மீண்டும் தொடங்க வாய்ப்பே இல்லாததால் முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய தருவாயில் இருந்தது. ஆனால் மழையின் குறுக்கீடு ஆட்டத்தின் முடிவை மாற்றி அமைத்துள்ளது.

Story first published: Sunday, August 8, 2021, 23:22 [IST]
Other articles published on Aug 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+