For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியில் ஓரம் கட்டப்படும் தமிழக வீரர்.. கோலியின் சதியா?.. முன்னாள் வீரர்கள் அதிருப்தி!

நாட்டிங்கம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் சேர்க்கப்படாதது குறித்த விவாதம் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. ட்ரெண்ட்ஸ் பிரிட்ஜில் தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

கடந்த 2014, 2018 ஆகிய தொடர்களில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்து வெளியேறியது. எனவே அந்த முடிவுகளுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய பொறுப்பு கேப்டன் விராட் கோலியிடம் உள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

நாட்டிங்கமில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 அசத்தல் ஃபார்ம்

அசத்தல் ஃபார்ம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அஷ்வினுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து களத்தில் கூட அஸ்வின் விக்கெட்டுகளை எடுத்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கக்கூடியவர் ஆனால் அவர் ஓரம்கட்டப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சி

இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சி

அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹர்மிசன், எனக்கு மிக ஆச்சரியமாக உள்ளது. அஸ்வின் விளையாடாததால், இங்கிலாந்து அணி வீரர்கள் ட்ரஸிங் அறையில் சற்று நிம்மதியுடன் சிரித்திருப்பார்கள். அஸ்வின் பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலு சரி அற்புதமாக விளையாடக்கூடிய ஒரு வீரர். அதுவும் இங்கிலாந்து களத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த அனுபவமிக்க வீரர். கவுண்டி அணிகளுடனான ஆட்டத்தில் கூட 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

சீனியர் பவுலர்கள்

சீனியர் பவுலர்கள்

இந்தியாவின் 2 சீனியர் ஸிபின்னர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு போட்டிகளில் விளையாடி பல விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆட்டத்தின் நுணுக்கம் தெரியும். பந்தில் நல்ல டேர்னிங் இல்லையென்றாலும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். எனவே ஒரு இங்கிலாந்து வீரராக என்னைக் கேட்டால், அஸ்வின் ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது. ஜடேஜாவுடன் சேர்ந்து அஸ்வினும் விளையாடி இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

கோலி மீது கோபம்

கோலி மீது கோபம்

சர்வதேச போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினை திடீரென ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓரம் கட்டினார் விராட் கோலி. அஸ்வினின் தேவை இருந்த போதும், அவரை பயன்படுத்தவில்லை. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை கோலி ஓரம் கட்டுகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, August 5, 2021, 18:45 [IST]
Other articles published on Aug 5, 2021
English summary
Former Cricket Players surprised over R Ashwin's omission from 1st Test ofIndia vs England 2021 series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+