Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுக்கு நூறாக உடைந்த நம்பிக்கை.. மீண்டும் ஏமாற்றிய புஜாரா.. கோபத்தில் கேப்டன் விராட் கோலி!

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சட்டீஸ்வர் புஜாரா மீண்டும் ஒருமுறை சொதப்பலில் ஈடுபட்டுள்ளார்.

Recommended Video

Ind vs Eng 1st Test போட்டியில் Red Cap அணிந்த Indian Team வீரர்கள்.. ஏன் தெரியுமா?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பவுலிங்கை தேர்வு செய்தார்.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் முதல் விக்கெட்டிற்கு 126 ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 68 ஆண்டுகளுக்கு பிறகு 50+ பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் சர்மா 83 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டானார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

தொடக்கம் சிறப்பாக அமைந்ததால் பின் வரிசை வீரர்கள் நம்பிக்கையுடன் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புஜாரா அதனை பொய்யாக்கினார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய புஜாரா 16 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். முதல் பந்தில் இருந்தே அவர் திணறியது, ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் இந்திய அணியின் சுவர் என பார்க்கப்பட்ட புஜாரவின் பலவீனத்தை எதிரணி வீரர்கள் கண்டறிந்துவிட்டதால், இனி அவருக்கான வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விராட் கோலியும் தனது நம்பிக்கையை புஜாரா உடைத்துவிட்டதால் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் புஜாராவுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலுமே சொதப்பியுள்ளார். எனினும் விராட் கோலி அவரை இன்னும் நம்பி வாய்ப்பு கொடுத்து வருகிறார். இதற்கு காரணம், தற்போதைய டெஸ்ட் அணியை பொறுத்தவரை புஜாரா தான் அதிக அனுபவம் கொண்ட வீரராக உள்ளார். விராட் கோலிக்கு அடுத்ததாக 6 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் அவர் மட்டுமே உள்ளார். எனவே அவர் அணியில் இருந்து நீக்கினால், உலகின் பலம் வாய்ந்த அணிகளின் ஒன்றான இங்கிலாந்தை சமாளிப்பதில் சற்று சிரமம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

புள்ளி விவரங்கள்

புள்ளி விவரங்கள்

கடந்த 2020ம் ஆண்டிற்கு முன்னர் வரை 49.48 ஆக இருந்த புஜாரவின் சராசரி ரன் விகிதம் 2020ம் ஆண்டில் இருந்து 26.35 ஆக சரிந்துள்ளது. அவர் கடைசியாக விளையாடிய 30 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய தொடரில் 77 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 12, 2021, 22:48 [IST]
Other articles published on Aug 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+