Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின.. 5வது டெஸ்ட் போட்டியின் நிலை என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லண்டன்: இந்திய அணி வீரர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட திடீர் கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இங்கிலாந்து அணி 1 வெற்றியும், இந்திய அணி 2 வெற்றிகளுடனும் முன்னிலை வகிக்கிறது.

 5வது டெஸ்ட் போட்டி

5வது டெஸ்ட் போட்டி

வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. இந்த போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள எமிரெட்ஸ் ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்வதற்கும், இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு மும்முரம் காட்டுவதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

 இந்திய அணியில் கொரோனா

இந்திய அணியில் கொரோனா

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்பதிலேயே குழப்பம் நீடிக்கிறது. இதற்கு காரணம் இந்திய அணிக்குள் கொரோனா பரவியது தான். 4வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

4வது கொரோனா பாதிப்பு

4வது கொரோனா பாதிப்பு

இது ஒருபுறம் இருக்க நேற்று இந்திய அணியில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து இந்திய வீரர்களும், ஊழியர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த முடிவுகளின் அடிப்படையில் தான் இன்று 5வது டெஸ்ட் போட்டி நடைபெறும் எனக்கூறப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்றதே கொரோனா பரவ காரணம் எனக்கூறப்படுகிறது. இதனால் கோலி மீதும் ரவி சாஸ்திரி மீதும் பிசிசிஐ கடும் கோபத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்டத்தில் பங்கேற்றதே கொரோனா பரவ காரணம் எனக்கூறப்படுகிறது. இதனால் கோலி மீதும் ரவி சாஸ்திரி மீதும் பிசிசிஐ கடும் கோபத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குவாரண்டைன்

குவாரண்டைன்

இந்நிலையில் வீரர்களுக்கான கொரோனா பரிசோதனைகள் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் இந்திய அணியில் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாததால், 5வது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Story first published: Friday, September 10, 2021, 10:21 [IST]
Other articles published on Sep 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+