
அசத்தல் வெற்றி
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை ஹெட்டிங்லி-ல் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி புதிதாக 4 வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. எனவே இந்த அணியை எதிர்க்கும் இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

என்ன மாற்றம் வேண்டும்
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை அனைவரும் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். பல போட்டிகளிலும் சொதப்பி வந்த ரகானே - புஜாரா ஆகியோர் கடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது மிக முக்கியமான நேரத்தில் ரன்களை எடுத்துக் கொடுத்தனர். எனவே பவுலிங்கில் மட்டும் தான் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது ஜடேஜாவுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பவுலிங்
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். 2வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி சரி செய்துவிட்டார். மேலும் அவர் விக்கெட் எடுக்காததும் அணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சிராஜ், ஷமி, பும்ரா, இஷாந்த் என 4 வேகப்பந்துவீச்சாளர்களுமே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தனர். இதன் காரணமாக தான் ஜடேஜா மாற்றப்பட வேண்டும் என கூறப்பட்டு வந்தது.

ப்ளேயிங்11
இந்நிலையில் 3வது டெஸ்டிலும் அஸ்வினுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து விராட் கோலி இன்று பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, வெற்றிக் கூட்டணியை ஏன் மாற்ற வேண்டும். ப்ளேயிங் 11ஐ மாற்ற வேண்டிய எந்த காரணமும் இல்லை. எனவே அப்படியே இருக்கும் என்பது போல கூறியுள்ளார். இதனால் அஸ்வின் மீண்டும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார்.

அனுபவம்
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற களமாக இருந்தாலும், அஸ்வின் அசால்ட்டாக பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். அதே போல பேட்டிங்கிலும் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் விராட் கோலி எதற்காக அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு குழப்பமாகவே உள்ளது.

இந்தியாவின் பவுலிங் திட்டம்
இந்திய அணி தற்போது வரை 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் பவுலிங் திட்டம் அமைத்து வந்தது. அதிலும் குறிப்பாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்தது. ஆனால் இந்த முறை ஆட்டத்தின் முதல் நாளும், 4 மற்றும் 5வது நாளும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், விராட் கோலி 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications