Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘தம்பி நீ வருத்தப்படுவ’.. சீனியர் வீரரை ஓரம் கட்டிய கேப்டன் கோலி.. கடும் அதிருப்தியில் லக்‌ஷ்மண்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் அதிருப்தியடைந்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதலில் சொதப்பிய நிலையில், இறுதியில் சிறப்பாக ஆடி 291 ரன்களை எடுத்தது.

4வது டெஸ்ட்

4வது டெஸ்ட்

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதது விவாதத்தை கிளப்பியுள்ளது. ஓவல் மைதான பிட்ச்சானது ஆட்டத்தின் 4வது மற்றும் 5வது நாளில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அஸ்வினை சேர்க்க விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மைக்கேல் வாகன்

மைக்கேல் வாகன்

இந்நிலையில் இந்த போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இதுகுறித்து பேசியிருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது மிகப்பெரும் தவறு. இது முட்டாள் தனமான முடிவு. நான் பார்த்ததிலேயே அணி தேர்வில் செய்யப்பட்ட பெரும் தவறாக இதனை பார்க்கிறேன் எனத்தெரிவித்திருந்தார்.

லக்‌ஷ்மண் அதிருப்தி

லக்‌ஷ்மண் அதிருப்தி

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் அதிருப்தியடைந்துள்ளார். இதுகுறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர், ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணியின் ரன் வேகத்தை கட்டுப் படுத்துவார். இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிக நெருக்கடி கொடுக்கும் திறமை வாய்ந்த பவுலர்.

கோலி வருத்தப்படுவார்

கோலி வருத்தப்படுவார்

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் விராட் கோலி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அஸ்வினை அணியில் எடுக்காததற்காக நிச்சயம் கோலி வருத்தப்படுவார். ஜடேஜாவை விட அஸ்வின் திறமையான வீரர் என லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

அஸ்வினின் அனுபவம்

அஸ்வினின் அனுபவம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 413 விக்கெட்களை எடுத்துள்ளார். 5 சதங்களையும் அடித்துள்ளார். இத்தகைய வீரரை அணியில் சேர்க்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என சமூக வலைதளங்களில் ரசிகர்களும் கொந்தளித்து வருகின்றனர்.

கோலி விளக்கம்

கோலி விளக்கம்

அஸ்வின் விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்திருந்த கேப்டன் கோலி, இங்கிலாந்து அணியில் நான்கு இடது கை வீரர்கள் (பேட்ஸ்மேன்கள்) உள்ளனர். ஆகையால், அவர்களுக்கு ஜடேஜாவால் சிறப்பாக பந்து வீச முடியும். இந்த மேட்சில் அவர் அசத்த முடியும். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களும் ஓவர் தி விக்கெட் வந்து பந்து வீச முடியும். அதுமட்டுமின்றி, நம்பர்.7வது வீரராக அவர் களமிறங்குவது முக்கியமானது" என்று தெரிவித்தார்.

Story first published: Saturday, September 4, 2021, 17:20 [IST]
Other articles published on Sep 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+