Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷிகர் தவான் இத மட்டும் செஞ்சா போதும்... நாளை தினம் அவருக்கானதுதான்...புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்பு!

புனே: இங்கிலாந்துடனான 2வது ஒருநாள் போட்டியில் மிகப்பெரும் மைல்கல்லை எட்ட ஷிகர் தவானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி நாளை நடைபெறவிருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் நாளைய தினத்தை, புதிய மைல்கல்லை எட்டி ஸ்பெஷலான நாளாக ஷிகர் தவான் மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

India vs England 2nd ODI: Shikhar Dhawan have a chances to achieve big ODI milestone

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் 98 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு நல்ல அடித்தளம் அடித்துக்கொடுத்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் சொதப்பிய பிறகு ஷிகர் தவானுக்கு அந்த தொடர் முழுவதும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. நேரடியாக முதல் ஒரு நாள் போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை ஷிகர் தவான் சரியாக பயன்படுத்திக்கொண்டு மீண்டும் தனது ஃபார்மை நிரூபித்தார். இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் 2வது டி20 போட்டியில் அவருக்கு மிகப்பெரும் வாய்ப்பு காத்துள்ளது.

நாளைய போட்டியில் மட்டும் அவர் 94 ரன்களை சேர்த்தால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களை அடித்த 10வது வீரராவார். மேலும் இதனை வெறும் 138 இன்னிங்ஸுகளில் விளையாடி எட்டுவதால் அதிவேகமாக 6000 ரன்களை அடிக்கும் 2வது இந்தியர் மற்றும் உலகளவில் 3வது வீரர் என்ற பெருமையை பெறுவார். முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். இவர் 136 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை கடந்தார். எனவே நாளைய போட்டியில் ஷிகர் தவான் புதிய மைல்கல்லை எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, March 25, 2021, 21:44 [IST]
Other articles published on Mar 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+