Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“குத்திப்போடு” ஆர்டர் போட்ட கோலி.. சரியாக போட்ட சிராஜ்.. அடுத்தடுத்த பந்தில் 2 விக்கெட்!

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நீண்ட நேரம் அச்சுறுத்தி வந்த பார்ட்னர்ஷிப்பை ஒரே அட்வைஸால் தவிடுபொடி ஆக்கினார் விராட் கோலி.

Recommended Video

Mohammed Siraj-Led India Attack Bundle Out England for 120 | Oneindia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் கடைசி கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதி வருவதால், வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது. ரூட் 180 ரன்கள் குவித்தார். முகமது சிராஜ் 4 விக்கெட்களையும், முகமது ஷமி 2, இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார்கள். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணி 298/8 (டிக்ளேர்) ரன்கள் குவித்து, இங்கிலாந்திற்கு 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

தொடக்கமே தடுமாற்றம்

தொடக்கமே தடுமாற்றம்

இலக்கைத் துரத்திக் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்கெட்ச் ஒவ்வொரு வீராக வெளியேற்றினர். இதனால் அந்த அணி 67/4 என திணறியது. ஆனால் இதன் பின்னர் வந்த ஜாஸ் பட்லர் - மொயின் அலி ஜோடி நீண்ட நேரம் நின்றதால் இந்தியாவுக்கு தலைவலி வந்தது.

தலைவலி ஏற்படுத்திய ஜோடி

தலைவலி ஏற்படுத்திய ஜோடி

அப்போது முகமது சிராஜ் மற்றும் ஜடேஜாவுக்கு மாற்றி மாற்றி ஓவர்கள் கொடுக்கப்பட்டு வந்தது. சிராஜ் குட் லென்ந்தில் பந்துவீசி வந்ததால் மொயின் அலி தடுப்பாட்டத்தில் ஈடுபட லாவகமாக இருந்தது. பட்லர் நிலைத்து நின்று ஆடக்கூடிய வீரர் என்பதால் அவரின் எப்படியாவது அந்த ஜோடியை பிரித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவுக்கு வந்தது. சிராஜ் பலவிதமாக பந்துகளை முயற்சித்த போதும் எதுவும் எடுபடாமல் இருந்தது.

கோலியின் ப்ளான்

கோலியின் ப்ளான்

இந்நிலையில் கோலி கூறிய ஒற்றை அட்வைஸ் அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்ற உதவியாக இருந்தது. ஆட்டத்தின் 39வது ஓவரில் முகமது சிராஜிடம் சென்ற விராட் கோலி, பந்தை நன்கு பவுன்சராக குத்திப்போட்டு என அறிவுரைக் கூறிவந்தார். குட் லெந்த் பந்தில் நிலைத்து நின்று ஆடுவதால், இங்கிலாந்து களத்திற்கு பொறுத்தமான பவுன்சர் பந்துகளை திடீரென வீசுமாறு கோலி அறிவுரை கூறினார்.

ப்ளானுக்கு பலன்

ப்ளானுக்கு பலன்

கோலியின் பேச்சை கேட்டு உடனடியாக ஒரு பவுன்சர் பந்தை மொயின் அலியை நோக்கி வீச, அந்த பந்து எட்ஜாகி 2வது ஸ்லிப்பில் நின்றுக்கொண்டிருந்த விராட் கோலியின் கையிலேயே அழகாக சிக்கியது. இதனையடுத்து வந்த சாம் கரணுக்கும் விராட் கோலி ஒரு கண்ணி வெடி வைத்திருந்தார். இதன் காரணமாக அடுத்த பந்திலேயே கீப்பர் கேட்சாகி டக் அவுட் ஆனார் சாம் கரண். தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

கடைசி போராட்டம்

கடைசி போராட்டம்

ஆட்டத்தை டிரா செய்வதற்காக இங்கிலாந்து வீரர்கள் நிலைத்து நின்று தடுப்பாட்டம் ஆட முயன்றனர். ஆனால் விராட் கோலியின் தந்திரத்தால் அந்த அணியின் ப்ளான்கள் தவிடுபொடியானது. எனினும் மறுமுணையில் ஜாஸ் பட்லர் நிலைத்து நின்று ஆடி வருகிறார். அவரை வெளியேற்ற இந்திய பவுலர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

Story first published: Monday, August 16, 2021, 23:41 [IST]
Other articles published on Aug 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+