‘சிரிப்பு காட்டாதீங்க’ பும்ரா கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்.. கோபத்தின் உச்சத்தில் ஆண்டர்சன் - வீடியோ
லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர் ஜஸ்பிரித் பும்ராவையும் வம்புக்கு இழுத்து சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் எளிதாக கிடைக்கவிருந்த வெற்றியை மழையின் காரணமாக தவறவிட்ட இந்திய அணி, தற்போது இந்த போட்டியில் வெற்றிபெற முனைப்பு காட்டி வருகிறது.

2வது டெஸ்ட் போட்டி
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி தனது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 391 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணியை விட தற்போது இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளனர்.

3வது நாள் ஆட்டம்
இந்த 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று நடைபெற்ற 3வது நாள் ஆட்டம் தான் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இங்கிலாந்து அணி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி ரன்களை குவித்து வந்தது. அதிலும் குறிப்பாக கேப்டன் ஜோ ரூட், மறுமுனையில் விக்கெட் வீழ்வதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல், ஒற்றையாளாக போராடி இங்கிலாந்தை தூக்கி நிறுத்தினார். இதனால்18 பவுண்டரிகளுடன் அவர் 180 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
போட்டிகள் ஒருபுறம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க, இரு அணி வீரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. முகமது சிராஜ் - ஆண்டர்சன் பிரச்னை, சிராஜ் - பேர்ஸ்டோ பிரச்னை, கே.எல்.ராகுல் மீது மதுபாட்டில்களின் மூடிகளை வீசிய சம்பவம் ஆகியவை ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
Recommended Video

பவுன்சர் ஓவர்
இங்கிலாந்து அணியின் கடைசி வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆண்டர்சனை, பும்ரா பவுன்சர் பந்துகளால் கடுப்பாக்கிவிட்டார். ஒரு முழு ஓவரையும் ஆண்டர்சனுக்கு எதிராக பும்ரா வீசினார். அதில் முதல் பந்திலேயே பும்ரா வீசிய பவுன்சர் பந்து ஆண்டர்சனின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. இதனால் அவருக்கு என்ன ஆனது என்பதை பார்க்க வீரர்கள் கூட ஆட்டம் 7 - 8 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் தனது பவுன்சர் ட்ரீட்மெண்ட்டை பும்ரா நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து பவுன்சர்களை பறக்கவிட்டு ஆண்டர்சனின் உடல்களை பதம் பார்த்தார்.
Anderson vs Bumrah. pic.twitter.com/MJpeDinUB3
— Simran (CowCorner9) August 15, 2021
கடுப்பான ஆண்டர்சன்
இறுதியில் அவரின் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றினார். ஆட்டம் முடிந்த பிறகு பும்ராவுக்கு அருகில் வந்த ஆண்டர்சன் கோபமாக வார்த்தைகளை உதிர்த்தார். இதற்கு பும்ரா சிரித்துக்கொண்டே நக்கலாக செல்ல, அது ஆண்டர்சனை மேலும் கடுப்பாக்கியது. இதனால் 2வது இன்னிங்ஸில் பும்ராவுக்கு ஏற்ற வைத்தியத்தை ஆண்டர்சனும் வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications