Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஆளாக ஜோ ரூட் 180 நாட் அவுட்.. கோலி வைத்த மாஸ்டர் ஸ்ட்ரோக்.. சீட்டுக்கட்டாக சரிந்த இங்கிலாந்து!

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் போட்டியில் 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சாமர்த்தியமான ஆட்டத்தால் இங்கிலாந்து சுருட்டப்பட்டது.

Recommended Video

IND vs ENG : 3 Highlights from Lord's Test, Day 2 | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார்.

தடுமாறிய இங்கிலாந்து

தடுமாறிய இங்கிலாந்து

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வலுவான ஸ்கோரை அடித்திருந்ததால், இங்கிலாந்து அணிக்கு சிறிது பிரஷர் கூடியது. இதனால் தொடக்கமே அந்த அணிக்கு சறுக்கலாக இருந்தது. தொடக்க வீரர் டாம்னிக் சிப்லே 11 ரன்களுக்கு வெளியேறினார். இளம் வீரர் முகமது சிராஜ் அந்த விக்கெட்டை எடுத்து வியக்கவைத்தார். அதன் பிறகு வந்த ஹசீப் ஹமீத்தும் அதே ஓவரில் சிராஜின் வேகத்தில் சிக்கினார். தான் சந்தித்த முதல் பந்திலேயே க்ளீன் போல்ட்டாகி வெளியேறினார்.

கேப்டனின் பொறுப்பான ஆட்டம்

கேப்டனின் பொறுப்பான ஆட்டம்

இதனால் இங்கிலாந்து அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் ஜோ ரூட், அணியை சரிவில் இருந்து மீட்டார். ஓப்பனிங் வீரர் ரோரி பேர்ன்ஸுடன் ஜோடி சேர்ந்து ஆடிய ரூட், 3 விக்கெட்டிற்கு 85 ரன்களை சேர்த்தது. நன்றாக விளையாடிவந்த ரோரி பேர்ன்ஸ் 49 ரன்களுக்கு அவுட்டானார். எனினும் மறுமுணையில் இருந்த ஜோ ரூட், தொடர்ந்து தனது அச்சுறுத்தலை கொடுத்து வந்தார்.

தலைவலி

தலைவலி

இதனால் ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுக்கும் முணைப்புடன் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் ஜோடி சேர்ந்து விளையாடிய பேர்ஸ்டோ - ஜோ ரூட் ஆகியோர் இந்திய பவுலர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி வந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களுக்கும் மேல் சென்றது. நீண்ட நேரம் நீடித்த இந்த பார்ட்னர்ஷிப்பை ஒரு கட்டத்தில் சிராஜ் உடைத்தார். ஜானி பேர்ஸ்டோ 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களை விளாசி அவுட்டானார்.

கோலி மாஸ்டர் ப்ளான்

கோலி மாஸ்டர் ப்ளான்

எனினும் மறுமுணையில் இருக்கும் ரூட்டினை, இந்திய பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவரின் ரன் வேட்டை தொடர்ந்துக்கொண்டே சென்று சதம் அடித்து அசத்தினார். இதனால் இந்திய பவுலர்களின் மீது பிரஷர் அதிகரித்தது. உடனடியாக வியூகம் ஒன்றை அமைத்த கேப்டன் கோலி, ஜோ ரூட்டை கண்டுக்கொள்ளாமல், மறுமுணையில் இருக்கும் வீரர்களின் விக்கெட்களை எடுக்க பவுலர்களை அறிவுறுத்தினார். அது பலனும் கொடுத்தது.

3ம் நாள் முடிவு

3ம் நாள் முடிவு

பேர்ஸ்டோவுக்கு பின்னர் வந்த பட்லர் 23 ரன்கள், மொயின் அலி 27 ரன்கள், சாம் கரண் 0, ராபின்சன் 6, மார்க் வுட் 5, ஆண்டர்சன் 0 என அனைவரும் வந்த வேகத்தில் பார்ட்னர்ஷிப் கொடுக்காமல் அவுட்டாகினர். ஆனால் மற்றொரு புறம் ஒற்றை ஆளாக போராடிய ஜோ ரூட் கடைசி வரை அவுட்டாகமல் 180 ரன்களை ஒரே ஆளாக அடித்தார். இதில் ஒரு சிக்ஸர் கூட கிடையாது. 18 பவுண்டரிகள் தான். இதனால் இங்கிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியை விட தற்போது 27 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

Story first published: Sunday, August 15, 2021, 11:04 [IST]
Other articles published on Aug 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+