Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கையில் கொத்துக்கொத்தாக டிக்கெட்டுகள்... கெத்து காட்டிய ரசிகர்கள்... அனல் பறக்குமா 2வது டெஸ்ட்!

சென்னை : இங்கிலாந்து - இந்தியா மோதும் 2வது டெஸ்ட் போட்டிகான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களை அனுமதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மோசமான தோல்வி

மோசமான தோல்வி

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற்றது.

 2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டியும் சென்னையிலேயே நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 50 % ரசிகர்களை அனுமதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதில் இங்கிலாந்தை பழிதீர்க்க இந்திய அணி முற்படும் என்பதால் போட்டியை காண ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

விற்பனை

விற்பனை

2வது டெஸ்ட் போட்டியில் 15,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் மைதானத்தின் அனைத்து காலரிகளிலும் ரசிகரகள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான டிக்கெட் விற்பனை பிப்.8ம் தேதி முதல் ஆன்லைனில் மட்டும் நடைபெற்றது. இதில் 100, 150 மற்றும் 200 ரூபாய் டிக்கெட்டுகள் என அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

 ரசிகர்கள் கூட்டம்

ரசிகர்கள் கூட்டம்

ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு இன்று நேரில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக மைதானத்தில் போட்டிகளை கண்டுகளிக்காத நிலையில் ரசிகர்கள் இந்த டிக்கெட்டுகளை வாங்க மைதானத்தின் முன்பு திரண்டனர். இது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Story first published: Thursday, February 11, 2021, 18:55 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+