Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘அவர இனி கிரவுண்டுக்கு அனுப்பாதீங்க’.. இங்கிலாந்தில் கோலி படைத்த விநோத சாதனை.. ரசிகர்கள் கிண்டல்

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி குறித்து நெட்டிசன்கள் கடும் கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவானது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானதில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

ஆனால் டாஸில் தான் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு விணை இருந்துள்ளது. முதல் போட்டியில் டாஸை இழந்த விராட் கோலி மீண்டும் ஒரு முறை டாஸை இழந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலிக்கும் - டாஸுக்கும் எட்டாத தூரமாகவே அமைந்து வருகிறது. இதற்கு சான்று கடந்த கால புள்ளி விவரங்கள். இதனால் கோலி எதற்காக டாஸ் போடலாம் செல்ல வேண்டும். நேரடியாக எதிரணி கேப்டனை பேட்டிங்கா பவுலிங்கா என்று கேட்டுவிட வேண்டியது தானே என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியுடன் சேர்த்து இங்கிலாந்து மண்ணில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் கோலி கேப்டன்சி செய்துள்ளார். இந்த போட்டிளில் ஒன்றில் கூட இதுவரை விராட் கோலி டாஸ் வென்றதில்லை. அனைத்திலும் தோல்வியே மிஞ்சியுள்ளது. குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, முதல் டெஸ்ட், 2வது டெஸ்ட் என மொத்தம் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸை தவறவிட்டுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி டாஸில் தோல்வியடைந்ததும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.

ராசி இல்லாத இங்கிலாந்து

ராசி இல்லாத இங்கிலாந்து

விராட் கோலி இதுவரை 70க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய ஒரே கேப்டன் என்ற பெருமை அவருக்கு உள்ளது. ஆனால் இங்கிலாந்துடன் மட்டும் அவருக்கு பிரச்னை அதிகமாக உள்ளது. கடைசியாக இங்கிலாந்துடன் நடைபெற்ற 11 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளார். இதனால் கோலி அதிர்ஷ்டம் இல்லாத கேப்டன் என குறைக்கூறி வருகின்றனர்.

Recommended Video

Rohit-க்கு மரியாதை கொடுத்த KL Rahul கடைசியில் Rohit செம்ம | Oneindia Tamil
தோனியை மிஞ்சினார்

தோனியை மிஞ்சினார்

அதிக டெஸ்ட் போட்டிகளை வழிநடத்தியவர் என்ற பட்டியலில் தோனியை மிஞ்சிய விராட் கோலி, அதிக டாஸ்களில் தோல்வியடைந்தவர்களின் பட்டியலிலும் தோனியை மிஞ்சியுள்ளார். தோனி கேப்டனாக இருந்தபோது 34 டாஸ்களில் தோல்வியடைந்துள்ளார். விராட் கோலி 36 டாஸ்களில் தோல்வியை சந்தித்திருக்கிறார். ஆனால் கேப்டன்சியில் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 12, 2021, 20:51 [IST]
Other articles published on Aug 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+