IND VS ENG TEST : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எந்த இலக்கை நிர்ணயித்தால் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் இந்த டெஸ்டில் பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.
பொதுவாக இந்திய ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டியின் கடைசி காலகட்டத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும். ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாகப்பட்டினம் ஆடுகளம் அவ்வளவு ஒன்றும் மோசமாக அளவுக்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லை.

மேலும் பேட்ஸ்மேன்கள் நன்றாக தான் விளையாடி வருகிறார்கள். கில் அந்த ஆடுகளத்தில் சதம் அடித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் பேட்டிங்கிற்கு ஒரு அளவுக்கு சாதகமாக தான் அந்த ஆடுகளம் இருக்கிறது. இதனால் இந்திய அணி எந்த டார்கெட்டை இங்கிலாந்துக்கு கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
பொதுவாக இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்கள் வழங்கினால் அதனை எட்டுவது கொஞ்சம் கடினம். ஆனால் இங்கிலாந்து அணி பேஸ் பால் என்ற யுத்தியை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது. குறிப்பாக வீரர்கள் ஒருநாள், டி 20 கிரிக்கெட்டில் இருப்பது போல் அடித்து ஆடுகிறார்கள்.
இதனால் சுழற் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எந்த இலக்கை நிர்ணயித்தாலும் அது ஆபத்து தான் என்ற நெருக்கடியான சூழல் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 3 ஆம் நாள் தேனீர் இடைவேளையில் 64 ஓவர் முடிவில் இந்திய அணி 227 ரன்கள் 6 விக்கெட் எடுத்து இருக்கிறது. இது இங்கிலாந்தை விட 370 ரன்கள் கூடுதலாகும்.
ஆனால் இந்த இலக்கை எல்லாம் இங்கிலாந்து எட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை அவர்கள் முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தான் நன்றாக விளையாடி 420 ரன்கள் குவித்தார்கள். மேலும் விசாகப்பட்டினம் ஆடுகளமும் பேட்ஸ்மேன்களுக்கு அச்சமூட்டும் அளவு இல்லை. சுழற் பந்துவீச்சாளர்கள் போராடி தான் விக்கெட்டை எடுக்க வேண்டும். மேலும் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடுகிறார்கள்.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 450 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதற்கு இன்னும் இந்திய வீரர்கள் கூடுதலாக நூறு ரன்கள் சேர்க்க வேண்டும். 450 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் இந்திய வீரர்கள் சுதந்திரமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்க முடியும்.மேலும் இமாலய இலக்கை துரத்த போகிறோம் என்ற மனதளவில் இங்கிலாந்து வீரருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் .
ஆனால் 400 ரன்களை எல்லாம் இலக்காக வைத்தால் அதனை எட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் டிக்ளேர் செய்ய வேண்டாம் என்றும் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுமே எடுக்கட்டும் என்ற யுக்தியை டிராவிட், ரோகித் பயன்படுத்த உள்ளனர். இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சி இருப்பதால் இங்கிலாந்து வீரர்களை சோர்வாக்கி விட்டு எவ்வளவு ரன்கள் கிடைக்கிறதோ அவ்வளவு லாபம் என்று டிராவிட் ரோகித் கூட்டணி இருக்கிறது.