Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘சொல்ற பேச்ச கேட்டாதானே’.. ஜோ ரூட் விக்கெட்டில் ஆர்வம்.. ரிவ்யூ கேட்பதில் கோலி - பண்ட் இடையே பிரச்னை

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் போது ரிவ்யூவ் கேட்பதில் ரிஷப் பண்ட் மற்றும் கோலி இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

IND vs ENG : 3 Highlights from Lord's Test, Day 2 | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார்.

தடுமாறிய இங்கிலாந்து

தடுமாறிய இங்கிலாந்து

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வலுவான ஸ்கோரை அடித்திருந்ததால், இங்கிலாந்து அணிக்கு சிறிது பிரஷர் கூடியது. இதனால் தொடக்கமே அந்த அணிக்கு சறுக்கலாக இருந்தது. தொடக்க வீரர் டாம்னிக் சிப்லே 11 ரன்களுக்கு வெளியேறினார். இளம் வீரர் முகமது சிராஜ் அந்த விக்கெட்டை எடுத்து வியக்கவைத்தார். அதன் பிறகு வந்த ஹசீப் ஹமீத்தும் அதே ஓவரில் சிராஜின் வேகத்தில் சிக்கினார். தான் சந்தித்த முதல் பந்திலேயே க்ளீன் போல்ட்டாகி வெளியேறினார்.

கேப்டனின் பொறுப்பான ஆட்டம்

கேப்டனின் பொறுப்பான ஆட்டம்

இதனால் இங்கிலாந்து அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் ஜோ ரூட், அணியை சரிவில் இருந்து மீட்டார். ஓப்பனிங் வீரர் ரோரி பேர்ன்ஸுடன் ஜோடி சேர்ந்து ஆடிய ரூட், 3 விக்கெட்டிற்கு 85 ரன்களை சேர்த்தார். நன்றாக விளையாடி வந்த ரோரி பேர்ன்ஸ் 49 ரன்களுக்கு அவுட்டானார். எனினும் மறுமுணையில் இருந்த ஜோ ரூட், தொடர்ந்து தனது அச்சுறுத்தலை கொடுத்து வந்தார்.

எல்.பி.டபள்யூ

எல்.பி.டபள்யூ

முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதம் அடித்ததே இங்கிலாந்து அணியின் கம்பேக்கிற்கு காரணமாக அமைந்தது. அதே போல தற்போதும் ரூட் அரைசதத்தை நோக்கி விளையாடி வருகிறார். இந்நிலையில் ரூட்டின் விக்கெட்டை எடுக்கும் ஆர்வத்தில் தான் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-க்கும் பிரச்னை ஏற்பட்டது. முகமது சிராஜ் வீசிய பந்து ஜோ ரூட்டின் பேடில் பட்டு சென்றது. இதற்கு அனைவரும் எல்.பி.டபள்யூ அவுட் கேட்க, நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

ரிவ்யூவ் பிரச்னை

ரிவ்யூவ் பிரச்னை

ஆனால் அதில் உறுதியாக இருந்த முகமது சிராஜ், கேப்டன் கோலியிடம் ரிவ்யூவ் எடுக்கலாம் என கேட்டார். இதற்கு கோலியும் சம்மதம் தெரிவித்து ரிவ்யூ கேட்கும் முடிவுக்கு சென்றார். ஆனால் அது அவுட் கிடையாது, ரிவ்யூ கேட்டால் பயனில்லை என ரிஷப் பண்ட் தடுத்தார். கோலி அம்பயரிடம் ரிவ்யூ கேட்டு கையை தூக்கியபோதும் பண்ட் அவரின் கையை பிடித்து கட்டுப்படுத்தினார். இறுதியில் கோலி, தனது விருப்பப்படி ரிவ்யூ கேட்டார். ஆனால் அது பண்ட் கூறியதை போல பலனளிக்கவில்லை. பந்து லெக் ஸ்டம்பிற்கு அவுட் சைட் திசையில் சென்றதால் அவுட் கொடுக்கப்படவில்லை.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

இதனால் அதிருப்தியடைந்த ரிஷப் பண்ட், நான் சொல்வதை கேட்டிருக்கலாம் என கோலியிடம் சிறிது நேரம் தெரிவித்து வந்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிஷப் பண்ட்-ஐ அனைவரும் அடுத்த தோனி என்று அழைத்து வருகின்றனர். அவரின் ரிவ்யூவும் அப்படிதான் இருக்கும் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். ஆனால் விக்கெட் கீப்பர் சொல்வதையும் கேட்காமல் கோலி ரிவ்யூ எடுத்து அதில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Story first published: Saturday, August 14, 2021, 17:00 [IST]
Other articles published on Aug 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+