Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9வது விக்கெட்டிற்கு 77 ரன் பார்ட்னர்ஷிப்.. இங்கிலாந்தை மிரட்டிய பும்ரா - ஷமி.. விழிப்பிதுங்கிய ரூட்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 8வது விக்கெட்டில் ஷமி - இஷாந்த் சர்மா மேற்கொண்ட மிரளவைக்கும் பார்ட்னர்ஷிப் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கே சவால் கொடுத்துள்ளது.

Recommended Video

Indian Cricketers Welcome Bumrah And Shami After Terrific Partnership

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய அணி கம்பேக் கொடுத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுலின் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய பௌலர்களுக்கு கடும் டஃப் கொடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிந்தாலும், கேப்டன் ஜோ ரூட் ஒற்றை ஆளாக 180 நாட் அவுட் அடித்தார். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் குவித்தது. இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை வகித்தது.

இந்தியாவின் 2வது இன்னிங்ஸ்

இந்தியாவின் 2வது இன்னிங்ஸ்

மிகவும் விறுவிறுப்புடன் 2வது இன்னிங்ஸை தொடர் இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியிருந்த தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் 2வது இன்னிங்ஸில் பின் வருமாறு 21 மற்றும் 5 ரன்களுக்கு வெளியேறினர். இதன் பின்னர் வந்த புஜாரா - ரகானே ஜோடி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ரன் குவித்தனர். எனினும் அது நீடிக்கவில்லை. புஜாரா 45 ரன்கள், கோலி 20, ரகானே 61 என அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்து 4ம் நாள் முடிவில் 181 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இன்று ஆட்டத்தின் 5ம் நாளை தொடங்கிய இந்திய அணிக்கு எதிர்பார்த்ததை போலவே மிக வேகமாக விக்கெட்கள் வீழ்ந்தன. ரிஷப் பண்ட் 22 ரன்களுக்கும், ஜடேஜா 3 ரன்களுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் இந்திய அணியின் கதை முடிந்துவிட்டது என அனைவரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா - முகமது ஷமி ஜோடி அந்த கதையை மாற்றி அமைத்தனர்.

9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்

9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்

9வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அவர்கள், இங்கிலாந்து பவுலர்களால் கடுமையாக சோதிக்கப்பட்டனர். குறிப்பாக பும்ராவை பவுன்சர்களால் தாக்கியது இங்கிலாந்தின் பவுலிங் படை. எனினும் அதனை தடுத்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி யாரும் எதிர்பார்க்காத வகையில் 50+ பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இங்கிலாந்தின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸராக பறக்கவிட்ட முகமது ஷமி 52 ரன்களை விளாசி விளையாடி வருகிறார். சர்வதேச டெஸ்டில் ஷமியின் 2வது அரைசதம் இதுவாகும். அதே போல பும்ரா 30 ரன்களை விளாசி விளையாடி வருகிறார். தற்போது வரை இவர்களின் பார்ட்னர்ஷிப் 77 ரன்களை எட்டியுள்ளது.

புதிய சாதனை

புதிய சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி, 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் எடுத்த அதிக ரன்கள் இதுதான். இதே போல டெஸ்டில் முகமது ஷமி மற்றும் பும்ராவின் அதிக பட்ச ரன்கள் இதுவே. இந்திய அணியின் டாப் ஆர்டரை சரித்த இங்கிலாந்தால் 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஜோ ரூட்டிற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, August 16, 2021, 20:45 [IST]
Other articles published on Aug 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+