Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

38 வருட கபில் தேவ்வின் சாதனை.. எந்த முன்னணி வீரர்களாலும் நெருங்க முடியவில்லை.. செய்து காட்டிய சிராஜ்

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் பவுலர் முகமது சிராஜ் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

Recommended Video

Mohammed Siraj-Led India Attack Bundle Out England for 120 | Oneindia Tamil

கடைசி நாள் இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக முகமது சிராஜ் தான் பார்க்கப்படுகிறார்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் (129) சதம் விளாசி அசத்தினார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது. ரூட் 180 ரன்கள் குவித்தார். முகமது சிராஜ் 4 விக்கெட்களையும், முகமது ஷமி 2, இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார்கள்.

விறுவிறுப்பான 2வது இன்னிங்ஸ்

விறுவிறுப்பான 2வது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸில் சற்று தடுமாறிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது. இதில் பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி (56), பும்ரா (34) இருவரும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்த உதவினர். இதனால் இங்கிலாந்திற்கு 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்ய முடிந்தது. இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்குக் கடைசி இரண்டு செஷன்கள் மட்டுமே இருந்ததால், போட்டியை டிரா செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்திய பவுலர்கள் சாதூர்யமாக செயல்பட்டு விக்கெட்களை சரித்து வெற்றி பெற்றனர்.

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

இந்த போட்டியில் முகமது சிராஜின் பங்கு மிகப்பெரும் ஒன்றாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மிக அதிகமாக செல்லவிருந்தது. ஆனால் சிராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றி அதனை கட்டுக்குள் கொண்டு வந்தார். அதே போல 2வது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார்.

திருப்புமுணை

திருப்புமுணை

குறிப்பாக மொயின் அலியின் விக்கெட்கள் அவருக்கு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது. ஜாஸ் பட்லர் - மொயின் அலி ஜோடி நீண்ட நேரம் நின்றதால் இந்தியாவுக்கு தலைவலி வந்தது. இதனால் சிராஜ் பந்துவீச சென்ற போது, அவரிடம் சென்ற விராட் கோலி, பந்தை நன்கு பவுன்சராக குத்திப்போட்டு என அறிவுரைக் கூறிவந்தார். இதனை கட்சிதமாக பிடித்துக்கொண்ட சிராஜ் மொயின் அலியின் விக்கெட்டை உடனடியாக எடுத்துக் கொடுத்தார். அதற்கு அடுத்த பந்திலேயே சாம் கரணின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

 சாதனை

சாதனை

இந்நிலையில் முகமது சிராஜ் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் மிக முக்கியமான மைதானமான லார்ட்ஸ்-ல், ஒரே டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 1982ம் ஆண்டு கபில் தேவ் 8 விக்கெட்களை கைப்பற்றியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதில் சிராஜும் சேர்ந்துள்ளார்.

Story first published: Tuesday, August 17, 2021, 11:38 [IST]
Other articles published on Aug 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+