
3வது நாள் ஆட்டம்
போட்டிகள் ஒருபுறம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க, இரு அணி வீரர்களும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. முகமது சிராஜ் - ஆண்டர்சன் பிரச்னை, சிராஜ் - பேர்ஸ்டோ பிரச்னை, கே.எல்.ராகுல் மீது மதுபாட்டில்களின் மூடிகளை வீசிய சம்பவம் ஆகியவை ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஜஸ்பிரித் பும்ராவும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

பவுன்சர் ஓவர்
இங்கிலாந்து அணியின் கடைசி வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆண்டர்சனை, பும்ரா பவுன்சர் பந்துகளால் கடுப்பாக்கிவிட்டார். ஒரு முழு ஓவரையும் ஆண்டர்சனுக்கு எதிராக பும்ரா வீசினார். அதில் முதல் பந்திலேயே பும்ரா வீசிய பவுன்சர் பந்து ஆண்டர்சனின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. இதனால் அவருக்கு என்ன ஆனது என்பதை பார்க்க வீரர்கள் கூட ஆட்டம் 7 - 8 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் தனது பவுன்சர் ட்ரீட்மெண்ட்டை பும்ரா நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து பவுன்சர்களை பறக்கவிட்டு ஆண்டர்சனின் உடல்களை பதம் பார்த்தார்.

கடுப்பான ஆண்டர்சன்
இறுதியில் அவரின் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றினார். ஆட்டம் முடிந்த பிறகு பும்ராவுக்கு அருகில் வந்த ஆண்டர்சன் கோபமாக வார்த்தைகளை உதிர்த்தார். இதற்கு பும்ரா சிரித்துக்கொண்டே நக்கலாக செல்ல, அது ஆண்டர்சனை மேலும் கடுப்பாக்கியது. இதனால் 2வது இன்னிங்ஸில் பும்ராவுக்கு ஏற்ற வைத்தியத்தை ஆண்டர்சனும் வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டூவர் பிராட்
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவின் செயல்பாட்டிற்கு ஸ்டூவர் பிராட்டு-ம் கோபமடைந்துள்ளார். ஸ்டூவர் பிராட் தற்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஆண்டர்சனின் கோபம் குறித்து ட்வீட் செய்துள்ள அவர், இன்று மீதம் உள்ள போட்டியை காண ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது ஆண்டர்சன் பதிலடி கொடுப்பார் என மறைமுகமாக சாடியுள்ளார்.

சவால்
மேலும் அவர், லண்டனில் தற்போது மேகமூட்டமாக உள்ளது. இதனால் பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும். இந்திய வலதுகை வீரர்களுக்கு நிச்சயம் சவாலாக விளங்கும். எல்.பி.டபள்யூ எடுப்பது மற்றும் பவுன்சர் பந்துகள் இங்கிலாந்தின் பலம் ஆகும். இது கண்டிப்பாக இந்திய அணியினருக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











