Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய தொப்பியை அணியாமல் வந்த வீரர்கள்.. இங்கிலாந்து வீரர்களுக்காக பெருமை மிகு செயல்.. காரணம் என்ன?

லார்ட்ஸ்: 2வது நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் திடீரென சிகப்பு நிற தொப்பியை அணிந்து வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Recommended Video

Ind vs Eng 1st Test போட்டியில் Red Cap அணிந்த Indian Team வீரர்கள்.. ஏன் தெரியுமா?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை சேர்த்திருந்தது.

இந்தியா வலுவான நிலையில் இருக்க, 2வது நாள் ஆட்டமான இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியது.

சிகப்பு தொப்பி

சிகப்பு தொப்பி

ஆனால் போட்டித்தொடங்கியவுடன் ரசிகர்கள் அனைவருக்குமே அதிர்ச்சி கிடைத்தது. கேப்டன் கோலி உட்பட இந்திய வீரர்கள் அனைவருமே, இந்தியாவின் தொப்பியை அணிந்துக்கொண்டு விளையாடாமல், சிகப்பு நிறத்திலான தொப்பியை அணிந்து மைதானத்திற்குள் வந்தனர். இந்திய அணி மட்டுமல்லாமல், மைதானத்தில் இருந்த இங்கிலாந்து வீரர்கள், வர்ணனையாளர்கள், கள நடுவர்கள் என அனைவருமே சிகப்பு நிறத்திலான தொப்பியை அணிந்திருந்தினர்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்நிலையில் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூவ் ஸ்ட்ராஸே அந்த கேள்விக்கெல்லாம் பதில். ஆண்ட்ரூ ஸ்ட்ராஸின் மனைவி ருத் ஸ்ட்ராஸ் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளார். பல்வேறு கட்ட சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்ட போதும், கடந்த 2018ம் ஆண்டு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

கேன்சர் உதவி மையம்

கேன்சர் உதவி மையம்

இதனையடுத்து கேன்சரால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிப்புரியும் வகையில் ரூத் ஸ்ட்ராஸ் கேன்சர் ஃபௌண்டேஷனை உருவாக்கி நடத்தி வருகிறார். இவரைப்போலவே தான் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக் க்ராத்தின் மனைவி ஜேனும் மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். இதன் பின்னர் மெக் க்ராத்தும் அறக்கட்டளை உருவாக்கி நடத்தி வருகிறார்.

இந்தியர்களின் மனம்

இந்தியர்களின் மனம்

இந்த சூழலில் ரூத் ஸ்ட்ராஸின் கேன்சர் அறக்கட்டளைக்கு மரியாதை கொடுக்கும் வகையிலும் நிதி திரட்டும் வகையிலும் இங்கிலாந்து வீரர்கள் சிகப்பு நிற தொப்பி அணிந்து விளையாட முடிவெடுத்தனர். அவர்களின் முடிவுக்கு மதிப்புக்கொடுத்த இந்திய வீரர்கள் தானும் இந்த விஷயத்தில் பங்குபெறுவதாக கூறி சிகப்பு நிற தொப்பியை அணிந்து விளையாடி வருகின்றனர்.

Story first published: Friday, August 13, 2021, 21:06 [IST]
Other articles published on Aug 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+