For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டியில் தீடீரென பறந்த பொருட்கள்.. கேஎல்.ராகுல் மீது இங்கி,ரசிகர்கள் கோபம்.. கடுப்பான கோலி- வீடியோ

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர்களால் கே.எல்.ராகுல் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

KL Rahul மீது Bottle மூடிகளை எறிந்த Eng ரசிகர்கள் ஆட்டம் பாதிப்பு | Oneindia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரனகளை சேர்த்த நிலையில் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 3ம் நாளான இன்று இந்த ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

3ம் நாள் ஆட்டம்

3ம் நாள் ஆட்டம்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் பின்னர் வந்த கேப்டன் ஜோ ரூட், பேர்ஸ்டோ ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தி கம்பேக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட் இந்த போட்டியிலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதனால் விக்கெட்களை எடுப்பதில் இந்திய வீரர்கள் வியூகம் வகுத்து வருகின்றனர்.

 இங்கி, ரசிகர்களின் செயல்

இங்கி, ரசிகர்களின் செயல்

இந்நிலையில் ஆட்டத்தின் போது கே.எல்.ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர்கள் திடீரென மதுபான மூடிகளை வீசி எறிந்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகளில் களத்தில் இருக்கும் வீரர்கள் மீது ரசிகர்கள் ஏதேனும் பொருட்களை வீசி எறிவது வாடிக்கையாக நடந்து வருகிறது. சமீபகாலமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்ததால் அது போன்ற சம்பவங்கள் குறைந்திருந்தன. இந்த சூழலில் தற்போது மீண்டும் அது தொடங்கியுள்ளது.

குழப்பமான ராகுல்

குழப்பமான ராகுல்

கொரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ளதால் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை காண முழு அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போட்டியின் 3வது நாளான இன்று கே.எல்.ராகுல் பவுண்டரி லைன் அருகே ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது திடீரென மதுபான பாட்டில்களின் மூடிகளை வீசி எறிந்தனர். எதற்காக அவர்கள் அப்படி செய்கிறார்கள் என ராகுலும் புரியாமல் திகைத்து போய் நின்றார். இதனை வர்ணனையாளர்களும் பார்த்து அது குறித்து பேசி வந்தனர்.

கடுப்பான கோலி

கடுப்பான கோலி

இந்த சம்பவம் குறித்து அறிந்த கேப்டன் விராட் கோலி, பொறுமையை இழந்தார். கே.எல்.ராகுலிடம், அந்த மூடிகளை எடுத்து வேகமாக ரசிகர்கள் மீதே விட்டு எறியுங்கள் என கோபத்துடன் தெரிவித்தார். இங்கிலாந்து டெஸ்டில் மிகவும் பொறுமையாக செயல்பட்டு வந்த கோலியையே கோபப்படுத்தியதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 என்ன காரணம்

என்ன காரணம்

கே.எல்.ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர்கள் கோபத்துடன் இருந்ததற்கு அவர் அதிக சதம் அடித்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல், 129 ரன்களை குவித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

Story first published: Saturday, August 14, 2021, 21:50 [IST]
Other articles published on Aug 14, 2021
English summary
Crowd in the Ground throws champagne corks at KL Rahul while fielding in 2nd test match against England
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+