For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மச்சீஸ்.. Open the Battle.. அனல் பறக்கும் முதல் டெஸ்ட்.. நாளை முதல்!

லண்டன்: இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை இரு அணிகளும் முறையே இரு அணிகளும் வென்ற நிலையில் 5 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.

எட்பாஸ்டன் மைதானத்தில்தான் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதற்கான ஆயத்தத்தில் இரு அணிகளும் உள்ளன. இரு அணிகளும் போர்க்குணத்துடன் இப்போட்டியை அணுகும் என்று தெரிகிறது.

முதல் டெஸ்ட் போட்டி குறித்த ஒரு அலசல் இது:


எட்பாஸ்டன் டெஸ்ட் போட்டிகள்

எட்பாஸ்டன் டெஸ்ட் போட்டிகள்

இந்த மைதானத்தில் 1902ஆம் ஆண்டு முதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி இங்கு 50 போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்திய அணி இங்கு 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியையும் ஒரு போட்டி ட்ராவிலும் முடிந்துள்ளது.

ஆசிய அணிகளுக்கு அல்வா மட்டுமே

ஆசிய அணிகளுக்கு அல்வா மட்டுமே

ஆசியா கண்டத்தை சேர்ந்த அணிகள் இங்கு இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

 இந்தியாவின் பேட்டிங்

இந்தியாவின் பேட்டிங்

இந்திய அணி விராட் கோஹ்லி தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை தற்போது சிறப்பான பார்மில் உள்ளது. ஆனால் ஷிகார் தவான் மற்றும் புஜாரா ஆகியோரின் பேட்டிங் பார்ம் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது.துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் விஜய் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். முரளி விஜய் ஆப்கான் அணிக்கெதிரான சதம் மற்றும் எஸ்ஸக்ஸ் அணிக்கெதிராக அரைசதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3வது வீரராக ரஹானே

3வது வீரராக ரஹானே

மூன்றாவது வீரராக ரஹானே. தற்போதைய இந்திய அணியில் இவர் ஒரு சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர். நான்காவது வீரராக புஜாரா களமிறங்க வாய்ப்புகள் அதிகம். இந்த தொடர் அவரது கிரிக்கெட் வாழ்வின் முக்கியமான தொடராகும். அடுத்ததாக விராட் கோஹ்லி,இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கபடும் வீரர். இங்கிலாந்தில் 2014ஆம் ஆண்டு சொதப்பிய அவரது பேட்டிங் இந்த முறை சிறப்பாக எடுபடும் என்று நம்பப்படுகிறது.

தினேஷ் வலு சேர்ப்பார்

தினேஷ் வலு சேர்ப்பார்

இவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார். அனுபவமும் திறமையும் கொண்ட அவர் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்ப்பார். அதன் பின்னர் இந்திய அணியின் தற்போதைய கபில் தேவ் என்றழைக்கப்படும் ஹர்டிக் பாண்டியா களமிறங்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்தியாவின் பந்து வீச்சு

இந்தியாவின் பந்து வீச்சு

இந்திய அணி வேகப்பந்துவீச்சையே நம்பியுள்ளது. காரணம் இங்கிலாந்து ஆடுகளங்கள் பௌன்ஸ் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். புவனேஸ்வர் குமார் தொடர் முழுவதும்,பும்ரா முதல் போட்டியிலும் விளையாடாதது பின்னடைவேயாகும். வேகப்பந்துவீச்சு உமேஷ் யாதவ்,இஷாந்த் சர்மா மற்றும் ஷமி அகியோரையே நம்பியுள்ளது.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ் ஒருநாள் மற்றும் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் ஆடி சூழ்நிலைக்கு தகுந்தவாறு பந்துவீசுவார் என்று நம்பப்படுகிறது. சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை அஸ்வின், குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோரை நம்பியுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் இருக்காரா இல்லையா

குல்தீப் இருக்காரா இல்லையா

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கலக்கிய குல்தீப் அணியில் இடம்பெறும் பட்சத்தில் ஜடேஜா அணியில் இடம்பெறமாட்டார் என்று தெரிகிறது. இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் ,2 ஆல் ரவுண்டர்கள் மற்றும் 3 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசைக்க முடியாத இங்கிலாந்து

அசைக்க முடியாத இங்கிலாந்து

இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் அசைக்கமுடியாத அணியாகவே உள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சமீபத்திய போட்டிகளில் சோபிக்கவில்லை.கடந்த 29 இன்னிங்ஸ்களில் அந்த அணியின் தொடக்க ஜோடி ஒருமுறை கூட 100 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரூட் மற்றும் குக் ஆகியோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

வலுவில்லாத மிடில் ஆர்டர்

வலுவில்லாத மிடில் ஆர்டர்

அந்த அணியின் மற்றுமொரு பிரச்சனை வலுவில்லாத மிடில் ஆர்டர் பேட்டிங். இதுபோன்ற குறைகளை இந்திய அணி தமக்கு சாதகமாக்கிக்கொண்டால் போட்டியில் வெற்றி பெறுவது சற்று சுலபம் ஆகும். பந்துவீச்சை பொறுத்தவரை சுழல் பந்துவீச்சு ரஷீத் மற்றும் மொயின் அலி ஆகியோரை நம்பியுள்ளது. பகுதி நேர பந்துவீச்சாளராக ஜோ ரூட் இந்திய அணிக்கு கஷ்டங்களை கொடுப்பார். வேகப்பந்துவீச்சு ஆண்டர்சன் மற்றும் பிராடு ஆகியோர் இந்திய அணிக்கு கடும் சவால்களை அளிப்பார்கள்.

Story first published: Tuesday, July 31, 2018, 16:26 [IST]
Other articles published on Jul 31, 2018
English summary
India Vs England Review
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+