கோஹ்லி மீண்டும் பொறுப்பான ஆட்டம்.. இந்தியா Vs இங்கிலாந்து.. முதல் டெஸ்ட் 3ம் நாள் ஹைலைட்ஸ்
பர்மிங்காம்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹமில் நடைபெற்று வருகிறது
போட்டியின் முதல் நாளில் அஸ்வின் 4 விக்கெட்களையும்,போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் சிறப்பம்சமாக கோஹ்லி போட்ட அபாரமான சதம் அமைந்தது. இங்கிலாந்தில் அவர் போட்ட முதல் சதம் இது.

நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 194 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு தேவை 84 ரன்கள். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு தேவை 5 விக்கெட்கள்.
போட்டியின் மூன்றாம் நாள் நிகழ்ந்த டாப் 5 நிகழ்வுகள்
1. சாம் கர்ரனின் அபார அரைசதம்
இங்கிலாந்து அணியின் ஆல் ரௌண்டர் சாம் கர்ரன் அபாரமாக விளையாடி 63 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணியின் ஸ்கோரை 87/7 என்ற நிலையில் இருந்து 184 ரன்கள் வரை கொண்டு சென்றது இவரே. 21 வயதிற்கு முன்னால் ஒரே போட்டியில் அரைசதம் மற்றும் 4 விக்கெட்களை வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர்.
2. இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சு
இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் 5 விக்கெட் வீழ்த்துவது இது எட்டாவது முறையாகும்.
3. இந்தியாவின் மோசமான டாப் ஆர்டர் பேட்டிங்
இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 194 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.விஜய்(6),தவான்(13),ராகுல்(13) மற்றும் ரஹானே(2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது வெளியேறினர்.
4. கோஹ்லியின் பொறுப்பான ஆட்டம்
இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி ஒருவரை மட்டுமே பேட்டிங்கில் இந்திய அணி நம்பும்படியாக உள்ளது. முதல் இன்னிங்சில் 149 ரன்களை அடித்த கோஹ்லி, இரண்டாவது இன்னிங்சில் 43 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்னும் இந்திய அணியின் வெற்றிக்கு 84 ரன்கள் மட்டுமே தேவை. கோஹ்லி தனது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு வெற்றி தேடி தருவார் என்று நம்பப்படுகிறது.
5. நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், இரண்டாவது இன்னிங்சில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேட்டிங் செய்து வருவது சற்றே ஆறுதலான விஷயம். அவர் 18 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். மறுமுனையில் விராட் கோஹ்லி 43 ரன்களுடன் உள்ளார். அனுபவம் மிக்க தினேஷ் கார்த்திக் விராட் கோஹ்லிக்கு உறுதுணையாக விளையாடும் பட்சத்தில் வெற்றி எளிதில் வசப்படும்.
Story first published: Saturday, August 4, 2018, 9:01 [IST]
Other articles published on Aug 4, 2018


Click it and Unblock the Notifications