For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்டியா அபார பந்துவீச்சு.. 45 ஓவர்களில் சுருண்ட இங்கிலாந்து.. இலக்கை எட்டுமா இந்திய அணி ?

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக முகமது சிராஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது .

இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்ற நிலையில் கடைசி போட்டியை வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .

சிராஜ் அசத்தல்

சிராஜ் அசத்தல்

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பாரிஸ்டோ டக் அவுட் ஆகி வெளியேறினார். இதேபோன்று நட்சத்திர வீரர் ஜோ ரூட்டும் முகமது சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார் . ஒரே ஓவரில் முஹம்மது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடியை அளித்தார்.

பட்லர் அதிரடி

பட்லர் அதிரடி

இதனை அடுத்து தொடக்க வீரர் ராய் , ஸ்டோக்ஸ் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தது. பென்ஸ் ஸ்டோக்ஸ் 27 ரன்களிலும் , ராய் 41 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து களத்துக்கு கேப்டன் ஜாஸ் பட்லர் வந்து அதிரடியாக விளையாட முயற்சித்தார். 80 பந்துகளை எதிர்கொண்ட அவர் 60 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

ஜடேஜா அபார கேட்ச்

ஜடேஜா அபார கேட்ச்

லண்டனில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடிய மோயின் அலி இந்த ஆட்டத்திலும் 44 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று லிவிங்ஸ்டனும் 27 ரன்கள் சேர்த்தார். ஒரே ஓவரில் பட்லர், லிவிங் ஸ்டோன் ஆகியோர் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தினார். இதில் ஜடேஜா பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

ஹர்திக் அபார பந்துவீச்சு

ஹர்திக் அபார பந்துவீச்சு

இறுதியில் கிரேக் ஓவர்டன் 32 ரன்கள் சேர்க்க இங்கிலாந்த அணி 45 வது ஓவரில் 259 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது .இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தவரை சிராஜ் 9 ஓவருக்கு 66 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 7 ஓவர் மட்டுமே வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று சாஹல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது இந்திய அணி 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

Story first published: Sunday, July 17, 2022, 20:00 [IST]
Other articles published on Jul 17, 2022
English summary
India vs England 3rd odi - India need 260 runs to win the seriesஹர்திக் பாண்டியா அபார பந்துவீச்சு.. 45 ஓவர்களில் சுருண்ட இங்கிலாந்து.. இலக்கை எட்டுமா இந்திய அணி ?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+