Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துணைக்கேப்டனின் இடத்திற்கே ஆப்பு.. கோலியின் சூசக கருத்து.. புதுமுக வீரருக்கு கொண்டாட்டம்!

ஹெட்டிங்லி: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்பதை கேப்டன் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

England beat India by an innings and 76 runs at Headingley | IND vs ENG 3rd Test | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1 - 1 என சமனில் உள்ளது.

ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சொதப்பல்

சொதப்பல்

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 78/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 19 ரன்கள் அடித்தார். விராட் கோலி, கே.எல்.ராகுல், புஜாரா, ரகானே ஆகியோர் மீண்டும் ஏமாற்றினர்.

குவிந்த ரன்கள்

குவிந்த ரன்கள்

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதனால் முதல் இன்னிங்ஸின் இறுதியில் அந்த அணி 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் ஸ்கோரை சமன் செய்யவே 354 ரன்கள் தேவைப்பட்டதால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு சுருண்டது.

சொதப்பலுக்கு காரணம்

சொதப்பலுக்கு காரணம்

இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல் குறித்து பேசிய விராட் கோலி, ஹெட்டிங்லியில் பிட்ச் நன்றாக தான் இருந்தது. ஸ்கோர்போர்டு பிரஷர் எங்களுக்கு எதிராக இருந்தது. முதல் இன்னிங்சில் நாங்கள் குறைவான ரன்களை குவித்ததால் இங்கிலாந்து வீரர்கள் பெரிய ரன் குவிப்பை எட்டிவிட்டனர். இருப்பினும் 2வது இன்னிங்ஸில் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். எனினும் இங்கிலாந்தின் பவுலிங் எங்களுக்கு சவால் கொடுத்தது.

சுழற்சி முறை

சுழற்சி முறை

இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கேப்டன் கோலி, பவுலிங் படையை பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லை. 4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற திட்டம் சரியாக தான் உள்ளது. எனவே அதுகுறித்து எந்தவித சிந்தனையும் இல்லை. ஆனால் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் சொதப்பியது மோசமான தோல்விக்கு வழிவகுத்தது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிக நீண்ட தொடர் என்பதல் சுழற்சி முறையில் வீரர்களை மாற்றலாம் என திட்டமிட்டு வந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரே அணி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது எனக்கூறினார்.

அணியில் மாற்றங்கள்

அணியில் மாற்றங்கள்

கோலியின் பதிலின் மூலம் அடுத்த டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டீஸ்வர் புஜாராதான் முதலில் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. ஆனால் 3வது டெஸ்ட் போட்டியில் புஜாரா முக்கியமான நேரத்தில் 91 ரன்கள் அடித்து தனது ஃபார்மை நிரூபித்தார். எனவே மோசமான ஃபார்மில் இருப்பது துணைக் கேப்டன் ரகானே மட்டுமே. எனவே இவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், அல்லது ஹனுமா விஹாரி களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, August 28, 2021, 23:01 [IST]
Other articles published on Aug 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+