இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட்: 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

டிக்ளேர் செய்த இங்கிலாந்து
முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு குக், பேலன்ஸ் இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் பேலன்ஸ் 156. பெல் 167, கேப்டன் குக் 95., புட்லர் 85 ரன்களைக் குவித்தனர்.

3 விக்கெட் எடுத்த புவனேஸ்
இந்திய அணியின் புவனேஸ்வர்குமார் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் முகமது சமி, இசாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

2வது நாள் இந்திய அணி தடுமாற்றம்
பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் 6 ரன்களில் அவுட் ஆனார். நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன் எடுத்திருந்தது.

3வது நாளில் முரளி அவுட்
இன்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. புஜாரா 24 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். முரளி விஜய் 35 ரன்களில் அவுட் ஆனார்.
3 விக்கெட்டுகளை இழந்து உணவு இடைவேளையின் போது 108 ரன்களை மட்டுமே எடுத்து திணறிக் கொண்டிருக்கிறது இந்திய அணி. கோஹ்லியும் ரஹானேவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications