3வது டெஸ்ட்.. இமாலய இலக்கு.. 3வது நாளின் ஹைலைட்ஸ்
Recommended Video

3வது டெஸ்ட்....3வது நாளின் ஹைலைட்ஸ்- வீடியோ
ட்ரெண்ட்பிரிட்ஜ்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களும்,இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களையும் (டிக்ளேர்) எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்களை எடுத்தது. இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 521 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

மூன்றாம் நாளில் நடந்த டாப் 5 நிகழ்வுகளின் தொகுப்பு:
1 விராட் கோஹ்லியின் அபார சதம்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது 23ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இங்கிலாந்து தொடரில் அதிக ரன்களை குவித்த கேப்டன் (440) என்ற பெருமையையும் பெற்றார்.
2 புஜாராவின் பொறுப்பான ஆட்டம்
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 72 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 18ஆவது அரைசதம் இதுவாகும்
3 பாண்டியாவின் அதிரடி அரைசதம்
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா அதிரடியாக ஆடி 52 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் நான்காவது அரைசதம் ஆகும். இவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
4 பேர்ஸ்டோவின் காயம்
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பைர்ஸ்டோ ஆண்டர்சன் பந்துவீச்சில் பந்தை பிடிக்க முயன்ற போது அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். இந்திய அணியின் இன்னிங்ஸ் முடியும் வரை அவர் மீண்டும் களமிரங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக பட்லர் கீப்பிங் பணியை செய்தார். நாளை பைர்ஸ்டோ பேட்டிங் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 இமாலய இலக்கு
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 521 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதுவே இந்திய அணி இங்கிலாந்துக்கு நிர்ணயித்த மிகப்பெரிய வெற்றி இலக்காகும்.
Story first published: Tuesday, August 21, 2018, 11:16 [IST]
Other articles published on Aug 21, 2018


Click it and Unblock the Notifications