Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்டுக்கு டாடா பைபை.. ஒரே மேட்ச்சில் ரோஹித் சர்மாவையே மிரள வைத்த விக்கெட் கீப்பர் துருவ்

ராஜ்கோட் : இந்திய டெஸ்ட் அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில், அறிமுக வீரர் துருவ் ஜுரேல் அந்த கவலையை தான் ஆடிய முதல் இன்னிங்ஸிலேயே போக்கி இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு வரும் ரிஷப் பண்ட்டுக்கு துருவ் ஜுரேல் ஆட்டத்தால் இடம் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகம் ஆனார் துருவ் ஜுரேல். முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே எஸ் பாரத், விக்கெட் கீப்பிங்கில் இரண்டு தவறுகளை தவிர நன்றாகவே செயல்பட்டார். ஆனால், பேட்டிங்கில் அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

 India vs England 3rd Test : Dhruv Jurel could end Rishabh Pant test chance


அதனால், அதிருப்தி அடைந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இளம் வீரரான துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு அளித்தனர். இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் குவித்து இந்திய அணியை 300 ரன்கள் தாண்டச் செய்தனர். ஆனால், 6 விக்கெட் வீழ்ந்த நிலையில் இந்திய அணி 400 ரன்கள் எட்ட வேண்டும் என்றால் பின் வரிசை வீரர்களுடன் இணைந்து துருவ் ஜுரேல் ரன் குவிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

துருவ் ஜுரேல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 46 ரன்கள் குவித்தார். இதில் முக்கியமான ஒரு ஷாட் கேப்டன் ரோஹித் சர்மாவையே மிரள வைத்தது. இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் உட், ஜுரேல்-ஐ அச்சுறுத்த வேண்டி பவுன்சர் பந்துகளாக வீசிக் கொண்டு இருந்தார். அதனால், ஜுரேல் ரன் குவிக்காமல் தடுப்பாட்டம் ஆடி வந்தார்.

மார்க் உட் வீசிய 146 கிலோமீட்டர் வேக பவுன்சர் ஒன்று அவுட்சைடு ஆஃப் திசையில் சென்றது. பொதுவாக தடுப்பாட்டம் ஆடுபவர்கள் இது போன்று ஸ்டம்ப்பை விட்டு வெளியே செல்லும் பவுன்சர்களை தொட மாட்டார்கள். ஆனால், துருவ் ஜுரேல் ஸ்லிப் ஃபீல்டர்களின் தலைக்கு மேலே செல்லும் வகையில் பந்தை மேற்புறமாக தட்டி விட்டார். அது சிக்ஸராக மாறியது. துருவ் சேர்த்த 46 ரன்களில் மூன்று சிக்ஸரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்ட் இதே போன்ற அதிரடி பேட்ஸ்மேன் தான். அதனால் தான் அவர் இல்லாமல் டெஸ்ட் அணி தடுமாறி வந்தது. அந்தக் குறையைப் போக்கி இருக்கிறார் துருவ் ஜுரேல். இனி ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பும் முன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் துருவ் ஜுரேல் அன் குவித்தால் ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகும்.

Story first published: Friday, February 16, 2024, 22:30 [IST]
Other articles published on Feb 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+