
தொடக்கமே பெரும் அதிர்ச்சி
அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். அந்த முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் அடித்து அசத்திய லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சனிடம் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால், புஜாரா 2வது ஓவரிலேயே களமிறங்கினார். ஆனால் தான், சந்தித்த 10 பந்திலேயே புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார்.

கோலியின் சொதப்பல்
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி அணியை மீட்டுக்கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவரும் ஏமாற்றத்தையே கொடுத்தார். 3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய துணைக் கேப்டன் அஜிங்கியா ரகானே, 18 ரன்களுக்கும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 2 ரன்களுக்கு வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதனால் இந்திய அணி 58 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. மறுமுணையில் நீண்ட நேரமாக பார்ட்னர்ஷிப் அமைக்க போராடி வந்த ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களுக்கு வெளியேறினார்.

ஆல் அவுட்
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே அடுத்தடுத்து சரிந்ததால், டெயில் எண்டர்ஸால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள், இஷாந்த் சர்மா 0, பும்ரா 0, முகமது சிராஜ் 2 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கோலி கேப்டன்சி
இந்நிலையில் இந்திய அணி எப்படி பட்ட சூழலில் இருந்து வேண்டுமானாலும் மீண்டு வரும் என இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் தெரிவித்துள்ளார். இந்தியா மிகவும் சிறப்பான அணி. விராட் கோலியின் கேப்டன்சி மிக மிக மோசமான பதிலடி தரக்கூடியது. அணி வீரர்களை தனது திட்டத்திற்கு ஏற்ப எளிதாக கொண்டுவரக்கூடியவர். இந்திய அணியில் நல்ல பேட்டிங் ஆர்டரும், நல்ல பவுலிங் ஆர்டரும் உண்டு.

மீண்டு வரும்
உலகின் எந்த களத்திலும், எப்படி பட்ட சூழல்களிலும் இந்திய அணியை மீட்டு வெற்றி பெற்றுக்கொடுக்க கூடிய பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். அதற்கு உதாரணம் ஆஸ்திரேலியாவில் அவர்கள் மீண்டு வந்தது. இங்கிலாந்து அணி எதிர்த்து விளையாடக்கூடிய மிகச்சிறப்பான அணி இந்தியா ஆகும். 3வது டெஸ்ட் போட்டிக்கு நான் அழைக்கப்பட்டதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இங்கிலாந்துக்காக நான் கடந்த 25 - 30 முறை செய்த சிறந்த ஆட்டங்களே 3 வருடத்திற்கு பிறகு நான் மீண்டும் அழைக்கப்பட்டதற்கு காரணம். இப்போட்டியை எதிர்நோக்கியுள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











