Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘நம்ம கோலியா இது’.. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்.. யாரும் எதிர்பார்காத பதில்!

ஹெட்டிங்லி: பத்திரிகையாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் ஆத்திரமடைந்த கோலி, சாமர்த்தியமாக வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழையினால் டிராவான நிலையில் 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

தோல்விக்கான விளக்கம்

தோல்விக்கான விளக்கம்

இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியிருந்த விராட் கோலி, முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் எடுத்ததும், அதன்பின்னர் வந்த இங்கிலாந்து அணியினர் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்துவிட்டனர். மிக மோசமான தோல்வியை பெற்றுவிடக்கூடாது என நினைத்தோம், அதற்காக ஓப்பனிங் ஆர்டர் சிறப்பாக விளையாடினோம். ஆனால் மிடில் ஆர்டரில் சொதப்பியதால் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததாக கூறியிருந்தார்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

விளையாட்டு பிரபலங்கள் பொதுவெளியில் கோபப்படுவது வழக்கமாக நடைபெறக்கூடிய ஒன்று தான். குறிப்பாக அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது பெரும்பாலும் கோபத்திற்கு உள்ளாவார்கள். ஒரு போட்டியில் தோல்வியடைந்துவிட்டால், அதுகுறித்த கேள்விகள் அவர்களிடம் கேட்கப்படும். அந்தவகையில் விராட் கோலியும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கோபப்பட்டு பின்னர், கட்டுப்படுத்திக்கொண்டு வெளியேறிவிட்டார்.

கடுப்பான செயல்

கடுப்பான செயல்

பத்திரிகையாளர் ஒருவர், இங்கிலாந்து பவுலர்கள் பெரும்பாலும் ஃபுல் லெந்த் மற்றும் பேட்களுக்கு தான் பந்துகளை வீசினர். அது ரன்களை குவிப்பதற்கு சாதகமான ஒன்று. இந்திய பேட்ஸ்மேன்கள் பேக் ஃபூட் செய்து விளையாடியிருக்கலாம். ஆனால் அதனை தவறவிட்டு நிறைய வாய்ப்புகளை கோட்டை விட்டனர் எனக் கேட்டிருந்தார். இதனால் கடுப்பான கேப்டன் விராட் கோலி, தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, 'ஓகே நன்றி' என்று மற்றும் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

ரசிகர்களுக்கு ஆச்சரியம்

ரசிகர்களுக்கு ஆச்சரியம்

எம்.எஸ்.தோனி போன்ற வீரர்களே பத்திரிகையாளர் சந்திப்பின் போது கோபமடைந்துள்ளனர். விராட் கோலி கடும் கோபமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது அவர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சென்றது பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஒரு கேப்டன் இப்படி தான் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, August 29, 2021, 16:40 [IST]
Other articles published on Aug 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+