Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்ட்- செய்யும் தவறு இதுதான்... குறிப்பிட்டு காட்டிய தீப் தசகுப்தா.. 4வது டெஸ்டில் சரி செய்வாரா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் செய்யும் தவறையும், அதனை சரிசெய்யவது குறித்தும் முன்னாள் வீரர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இங்கிலாந்தின் கோட்டையாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்திலேயே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதால் அடுத்தடுத்த போட்டிகளில் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியே தலைகீழாக மாறியது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய படுமோசமாக தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் தற்போதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கின்றன. நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

விவாதம்

விவாதம்

இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து கருத்துக்கள் பரவத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் பெரியளவில் சோபிக்காத ரிஷப் பண்ட் மீது விமர்சனங்கள் அடுக்கப்பட்டு வருகின்றன. தேவையில்லாத பந்துகளை அடித்து ஆட்டமிழக்கிறார். இவர் ஒருநாள், டி20 போட்டிக்குத்தான் சரிப்பட்டு வருவார் என பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டை குறிவைத்து அணியில் மிகப்பெரும் மாற்றம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

 மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டதால், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இங்கிலாந்து களத்தில் அவரால் சோபிக்க முடியவில்லை. இந்த தொடரில் 5 இன்னிங்ஸில் விளையாடி 87 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

 தீப் தசகுப்தா அட்வைஸ்

தீப் தசகுப்தா அட்வைஸ்

இந்நிலையில் ரிஷப் பண்ட், மீண்டும் ரன்களை குவிப்பதற்கு முன்னாள் வீரர் தீப் தசகுப்தா அடவைஸ் கூறியுள்ளார். அதில் அவர், ரிஷப் பண்ட், தனது ஷாட் தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும். நட்சத்திர வீரர்களான ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகியோர் இங்கிலாந்து களத்தை நன்கு அறிந்தவர்கள். எனவே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்பில் சிறப்பாக இருப்பார்கள். எனவே ரிஷப் பண்ட் ஆட்டத்தை தொடங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆனால் தொடக்கத்திலேயே அதிரடி காட்டுகிறார். இதுதான் அவர் செய்யும் தவறு.

நம்பிக்கை வேண்டும்

நம்பிக்கை வேண்டும்

பண்ட்-ன் மனநிலை ஒரே மாதிரி வைப்பது முக்கியம். பண்ட் ஒரே ஒரு இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டுவிட்டால் போதும், அதன்பிறகு வெற்றி தானாக வரும். எனவே பண்ட்-க்கு இன்னும் சிறிது வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.

கோலியின் சிந்தனை

கோலியின் சிந்தனை

ரிஷப் பண்ட்டை நீக்கி விட்டு கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். எனினும் ரிஷப் பண்ட்-ஐ நீக்குவது குறித்து விராட் கோலி தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதாகவும், அணியில் மாற்றத்தை கொண்டு வரும் பேச்சுக்கே அவர் தயாராக இல்லை எனவும் கூறப்படுகிறது.

Story first published: Wednesday, September 1, 2021, 15:28 [IST]
Other articles published on Sep 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+