Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘ஆரம்பமே அமர்களம்’..டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்.. ராஜாவாக திகழும் இந்தியா.. அச்சுறுத்தும் பாகிஸ்தான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளை முந்தி இந்திய அணி சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஜூலை 22ம் தேதியுடன் நிறைவடைந்தது. கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

மழையினால் பெரியளவில் பாதிக்கப்பட்ட இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நியூசிலாந்து அணி.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

இதனையடுத்து 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு முதல் போட்டியாக இங்கிலாந்து டெஸ்ட் அமைந்துள்ளது. இதனால் இந்த தொடரில் எப்படி செயல்பட்டு புள்ளிப்பட்டியலில் முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியல்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விதிப்படி ஒரு அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு12 புள்ளிகள் வழங்கப்படும். அதே போன்று ஆட்டம் சமனில் முடிவடைந்தால் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகள் பிரித்து தரப்படும். அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மழையினால் டிராவானதால் இந்திய அணிக்கு 6 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதே போல 2வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் 12 புள்ளிகள் வழங்கப்பட்டது. எனினும் இறுதியில் இந்திய அணி 14 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்ததால், இரு அணிகளுக்குமே தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது. அதன்படி இந்திய அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அந்த அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகளை பெற்றது.

இங்கிலாந்தின் நிலைமை

இங்கிலாந்தின் நிலைமை

இதே போல 3வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது. இந்த அணியும் 12 புள்ளிகளை தான் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டை வென்றதால் இந்த புள்ளிகள் கிடைத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் இங்கிலாந்து அணி 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், 26 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை தொடும். ஆனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, August 25, 2021, 16:08 [IST]
Other articles published on Aug 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+