Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு.. கடைசி ஒரே ஒரு வழி.. பயன்படுத்திக்கொள்வாரா கோலி?

ஹெட்டிங்லி: 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அனி 354 ரன்கள் பின் தங்கிய சூழலில் 2வது இன்னிங்ஸில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் பின்னர் களமிறங்கி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இப்போட்டியில், அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே வெளியேறினார். பின்னர் வந்த புஜாரா, 9 பந்துகளை சந்தித்து ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து. இதற்கு அடுத்து வந்த அனைத்து வீரர்களும் சொதப்ப, 2வது செஷன் முடிவடைவதற்குள் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது. கடந்த போட்டியில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த பும்ரா - ஷமி இருவரும் கோல்டன் டக் அவுட்டாகினர்.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஓப்பனிங் ஜோடி ரோரி பேர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 135 ரன்களை சேர்த்தனர். பேர்ன்ஸ் 61 ரன்களை எடுத்து ஷமியின் வேகத்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ஹசீப் ஹமீத்தை 68 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பினார் ரவீந்திர ஜடேஜா.

இதனையடுத்து டேவிட் மாலனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உச்சிக்கு எடுத்துச் சென்றார். சிறப்பாக விளையாடிய அவர், இந்த போட்டியிலும் சதம் விளாசினார். பின்னர் இந்த ஜோடியை சிராஜ் பிரித்தார். டேவிட் மாலன் 70 ரன்களுக்கும், ஜோ ரூட் 121 ரன்களுக்கும் வெளியேறினர். இதற்கு பின்னர் வந்த வீரர்கள் சொதப்ப, இங்கிலாந்து அணி இன்னிங்ஸில் 432 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்யவே இந்திய அணிக்கு இன்னும் 354 ரன்கள் தேவை. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் முழுமையாக இருப்பதால், இந்திய அணி சீரான வேகத்தில் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்திய அணி 600+ ரன்கள் எடுத்தால் மட்டுமே இங்கிலாந்திற்கு 250 ரன்களையாவது இலக்காக நிர்ணயிக்க முடியும். ஆனால் முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கே சுருண்ட இந்தியா, 2வது இன்னிங்ஸில் 600 ரன்கள் எடுக்குமா என்பதில் சந்தேகமே.

இந்தியாவின் மோசமான ஃபார்ம்

இந்தியாவின் மோசமான ஃபார்ம்

இந்திய அணியில் ஓப்பனிங் ஜோடியை தவிர வேறு எந்த வீரரும் நல்ல ஃபார்மில் இல்லை. ரோகித் சர்மா- கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக நீண்ட நேரம் நிலைத்து நின்று ரன் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இதன் பிறகு வரும் புஜாரா, ரகானே ஆகியோர் திணறி வருகின்றனர். இதே போல கேப்டன் கோலியும் நிதானமாக விளையாட வேண்டிய சூழல் இது.

வலுவான பவுலிங்

வலுவான பவுலிங்

ஹெட்டிங்லி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் ஆக உள்ளது. இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், ராபின்சன் என நட்சத்திர பவுலர்கள் இருப்பதால் இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடி எவ்வளவு நேரத்திற்கு நிலைத்திருக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

Story first published: Friday, August 27, 2021, 20:06 [IST]
Other articles published on Aug 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+