Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘நீயெல்லாம் அட்வைஸ் பண்ணலாமா’... விராட் கோலி செய்த தவறு.. முன்னாள் வீரர் கடும் தாக்கு!

ஹெட்டிங்லி: இந்திய அணி கேப்டன் விராட் கோலி அட்வைஸ் கூறுவதற்கு முன்னர், அவர் முதலில் அதனை செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் தாக்கியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று (ஆக.25) தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். காலை முதல் செஷன் பவுலர்களுக்கு சிறப்பாக ஒத்துழைக்க, இங்கிலாந்து பவுலர்களிடம் இந்தியாவின் பேட்டிங் படை 78 ரன்களுக்கு சரணடைந்தது. டெஸ்ட் தொடரில் இந்தியா பதிவு செய்யும் மூன்றாவது குறைந்தபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் இதுவேயாகும்.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார் ராகுல். ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ரோகித், கே.எல்.ராகுல், பண்ட் போன்ற முக்கிய வீரர்களின் ஃபார்ம் கூட இந்த ஒரு போட்டியில் தான் மோசமாக இருந்தது. ஆனால் கேப்டன் விராட் கோலியின் ஃபார்ம் நீண்ட நாட்களாக பரிதாபமான நிலையில் உள்ளது.

மீண்டும் சொதப்பிய கோலி

மீண்டும் சொதப்பிய கோலி

கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறி இருக்கிறார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல்.. அதாவது சதம் அடிக்க முடியாமல், விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50வது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக 50 போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்நிலையில் விராட் கோலியின் மோசமான ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் மகிந்தர் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விராட் கோலி அட்வைஸ் கூறினால் மட்டுமல்ல, அதன் படி முதலில் தான் நடந்துக்கொள்ள வேண்டும் முன்பு நடந்த ஒரு விஷயத்தை குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார். 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளார்களிடம் பேசிய விராட் கோலி, சண்டை, பழிவாங்கும் எண்ணங்களை ஓரம்கட்டிவிட வேண்டும் எனக்கூறியிருந்தார். ஆனால் அதனையே அவர் செய்துள்ளதாக மகிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

கோலி முதலில் கற்க வேண்டும்

கோலி முதலில் கற்க வேண்டும்

போட்டிக்கு முன்னதாக பேசியிருந்த விராட், இங்கிலாந்து களங்களில் பழிவாங்கும் எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு ஆடினால் நஷ்டம் எனத்தெரிவித்திருந்தார். அது சரியான கருத்து. ஏனென்றால் இங்கிலாந்து பிட்ச்-ல் சுலபமாக பேட்டிங் செய்துவிட முடியாது. ஆனால் கோலி கூறியதை அவரே செய்யவில்லை.

இந்திய பிட்ச் இல்லை

இந்திய பிட்ச் இல்லை

இங்கிலாந்து ஒன்றும் இந்தியா போன்ற பிட்ச்கள் கிடையாது. வந்த உடனேயே இங்கு ட்ரைவ் ஷாட்கள் ஆட முடியாது. முதல் இன்னிங்ஸில் விராட் கோலி களத்தில் சிறிது நேரம் முதலில் தாக்குப்பிடித்து நிற்கவேண்டும். இதற்கு முன்னர் அவர் நிலைத்து நின்றதால் தான் இங்கிலாந்து தொடரில் ஒரு முறை 600 ரன்களுக்கு மேல் குவித்தார். முதலில் பந்தின் வேகம், பிட்ச்-ன் தன்மை ஆகியைவை உணர்ந்துவிட்டால், பிறகு ஷாட் ஆடலாம் எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 26, 2021, 21:08 [IST]
Other articles published on Aug 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+