
திணறும் இந்திய அணி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்திலேயே ஆப்பு வாங்கியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கிற்கு களமிறங்கிய இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் நாள் ஆட்டத்தின் 3வது செஷன் வரை கூட இந்திய அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்தியாவுக்கு தலைவலியை கொடுத்தனர். 3 வீரர்கள் அரைசதம் அடிக்க, கேப்டன் ஜோ ரூட் சதம் அடிக்க, முதல் இன்னிங்ஸில் அந்த அணி 432 ரன்களை குவித்தது. இந்தியாவை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த இப்படி ஒரு புறம் மீண்டு வர முடியாமல் திணறிக்கொண்டிருக்க, மற்றொரு புறம் ரவிச்சந்திரன் அஸ்வின் வேறு விஷயத்தில் களமிறங்கியுள்ளார்.

குவிந்த விமர்சனங்கள்
இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை அணிக்குள் சேர்த்தார் விராட் கோலி. ஆனால் ஜடேஜாவால் முதல் இரண்டு போட்டிகளிலுமே ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தினர். விராட் கோலி அஷ்வினை நீக்கியது தவறு என்று முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் பலரும் விமர்சனங்களை அடுக்கினர். மேலும் தற்போது 3வது டெஸ்டில் மட்டும் அஸ்வின் இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு ப்ரேக் த்ரோ கொடுத்திருப்பார் என கூறி வருகின்றனர்.

அஸ்வின் புகைப்படம்
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு நடுவே அஸ்வின் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் இறங்கியுள்ளார். அதிலும் அவர் இம்முறை பவுலிங் பயிற்சியில் ஈடுபடாமல் வித்தியாசமான ஒரு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வலதுகை வீரரான அஸ்வின், இடதுகையில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிக்கு பதிலடி
அஸ்வின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சற்று திணறுவார், ஜடேஜா பேட்டிங்கிற்கும் உதவுவார் என்றுக்கூறி தான் கோலி ஜடேஜாவை தேர்வு செய்தார். ஜடேஜா பேட்டிங்கிற்கு உதவுவார் என்று தானே என்னை ஒதுக்கி வைத்தாய், இந்த முறை பேட்டிங்கிலும் சொதப்பி இருக்கிறார், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறாய். இங்கு நான் பேட் உடன் தயாராக நிற்கிறேன் பார். என விராட் கோலியிடம் கேட்பது போன்று இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications