Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜடேஜா.. இந்திய அணியில் குழப்பம்.. கோலிக்கு கடும் நெருக்கடி!

ஹெட்டிங்லி: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினை எப்படியாவது அணிக்குள் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு விராட் கோலி தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழையினால் டிராவான நிலையில் 2வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஹெட்டிங்லியில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

3வது போட்டி

3வது போட்டி

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் பவுலிங்கிலும் சொதப்பியது. 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர்களை கொண்ட படையை களமிறக்கிய போதும், இங்கிலாந்தின் பிட்ச்-க்கு சாதகமாக அமையவில்லை. குறிப்பாக இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியை உடைக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர்.

மீண்டும் விவாதம்

மீண்டும் விவாதம்

இதனால் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலுமே அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் முதல் 2 போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. 3வது டெஸ்டில் மட்டுமே 2 விக்கெட்டுகளை எடுத்தார். எனவே அஸ்வின் மட்டும் இருந்திருந்தால், இங்கிலாந்தின் பார்ட்னர்ஷிப்பை உடைத்திருப்பார், அவருக்கு 4வது டெஸ்ட் போட்டியிலாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஜடேஜாவுக்கு காயம்

ஜடேஜாவுக்கு காயம்

இந்நிலையில் 4வது டெஸ்டில் விராட் கோலி எப்படியும் அஸ்வினை சேர்க்க வேண்டுமென்ற சூழல் உருவாகியுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. ஹெட்டிங்லி டெஸ்டின் 2வது நாள் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்த போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது.

அஸ்வினுக்கான வாய்ப்பு

அஸ்வினுக்கான வாய்ப்பு

ஸ்கேனில் ரவீந்திர ஜடேஜாவுக்கு உள் காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர் அடுத்த டெஸ்டில் களம் காணுவது சந்தேகமே என கூறப்படுகிறது. இதனால் அடுத்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படியும் களம்காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Story first published: Sunday, August 29, 2021, 16:36 [IST]
Other articles published on Aug 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+