For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

92 வருட இந்திய கிரிக்கெட் சரித்திரத்திலேயே பிரம்மாண்ட வித்தியாசத்தில் வெற்றி.. சாதித்த ரோஹித் சர்மா

ராஜ்கோட் : இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 577 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணியின் வரலாற்றிலேயே ரன்கள் வித்தியாசத்தில் இதுதான் பெரிய வெற்றி ஆகும். இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது பெரிய தோல்வி ஆகும்.

இளம் வீரர்களை கொண்ட அணியை வைத்து இங்கிலாந்து அணியின் கதையை முடித்துள்ளது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் Bazball எனும் அதிரடி ஆட்டம் ஆடும் பாணி இந்தியாவிடம் எடுபடாமல் போனது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் குவித்து இருந்தனர்.

India vs England 3rd test record : India beat england by 434 runs and it is huge test victory record

அடுத்து இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 214*, சுப்மன் கில் 91, சர்ஃபராஸ் கான் 68* ரன்கள் குவித்தனர். இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 557 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்து இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்தது இந்திய அணி.

அந்த இலக்கை எட்ட வாய்ப்பே இல்லை என்பது தெரிந்த நிலையில் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஜடேஜா 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் இதுவே பெரிய வெற்றி ஆகும். அதே போல இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் இது இரண்டாவது மோசமான தோல்வி ஆகும்.

ரன் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற மிகப்பெரிய டெஸ்ட் வெற்றிகள் பட்டியல் :

434 vs இங்கிலாந்து, ராஜ்கோட் 2024
372 vs நியூசிலாந்து, மும்பை 2021
337 vs தென்னாப்பிரிக்கா, டெல்லி 2015
321 vs நியூசிலாந்து, இந்தூர் 2016
320 vs ஆஸ்திரேலியா, மொஹாலி 2008

Story first published: Sunday, February 18, 2024, 17:17 [IST]
Other articles published on Feb 18, 2024
English summary
India vs England 3rd test record : India beat england by 434 runs and it is huge test victory record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+