Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்ட்-க்கு அம்பயர்கள் செய்த அநியாயம்.. கிளம்பிய சர்ச்சை.. சுனில் கவாஸ்கர் ஆவேசம்!

ஹெட்டிங்லி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது, ரிஷப் பண்ட்-க்கு கள நடுவர்கள் அநியாயம் செய்ததாக முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2021: Shreyas or Pant? Delhi yet to decide for Captain | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி 4ம் நாளன்றே முடிவுக்கு வந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணி தோல்வியடைந்தாலும், இறுதிகட்டத்தில் கேப்டன் கோலி மற்றும் புஜாராவின் இன்னிங்ஸ் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல் பிரச்னை என்ன

முதல் பிரச்னை என்ன

இந்த போட்டியில் ரிஷப் பண்ட், தனது கீப்பிங் க்ளவுசில் விரல்களை சேர்த்து வைத்து டேப் ஒட்டியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக டேவிட் மாலனின் விக்கெட் வீழ்ந்த நேரத்தில் கள நடுவர்கள் இதனை கண்டுபிடித்தனர். இதனையடுத்து கேப்டன் கோலியிடம் தெரிவித்து கிளவுசில் இருந்த டேப்பினை அகற்றினர்.

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

இந்நிலையில் தற்போது பண்ட் குறித்து மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த போட்டியின்போது ரிஷப் பண்ட்டிற்கு எதிராக அம்பயர்கள் எடுத்த ஒரு முடிவு தான் அதற்கு காரணம். இன்றைய போட்டியின் போது இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட், கிரீசுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்துக்கொண்டிருந்தார். பல்வேறு ஓவர்களுக்கு தொடர்ந்து இதையே தான் அவர் செய்து வந்தார்.

நடுவர்களின் தவறான கருத்து

நடுவர்களின் தவறான கருத்து

அதனை கவனித்த அம்பயர்கள் இனிமேல் நீங்கள் கிரீசுக்கு வெளியே நின்று பேட்டிங் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். அதன்பிறகு ரிஷப் பண்ட் கிரீசுக்குள் நின்றவாறு பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பிறகு ஏன் நான் கிரீசுக்கு உள் நின்று விளையாட வேண்டும் என்று பண்ட் கேள்வி எழுப்பியதற்கு நீங்கள் வெளியே நின்று விளையாடுவதால், பிட்ச்-ல் சில முக்கிய இடங்கள் சேதமடைவதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே நீங்கள் உள்ளே நிற்க வேண்டும் என நடுவர்கள் கூறி இருக்கிறார்கள்.

கொந்தளித்த கவாஸ்கர்

கொந்தளித்த கவாஸ்கர்

இந்நிலையில் நடுவர்களின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ஒரு பேட்ஸ்மேனை எப்படி நடுவர் கட்டுப்படுத்த முடியும். ஒரு போட்டியில் எங்கு நின்று விளையாட வேண்டும் என்பது பேட்ஸ்மேனின் தனிப்பட்ட முடிவு. அவர் எங்கு நின்று வேண்டுமானாலும் விளையாடுவார். ஒரு பேட்மேனின் தனிப்பட்ட முடிவில் அம்பயர் நுழையக்கூடாது. ரிஷப் பண்ட் எங்கே நிற்க வேண்டும் என்று அம்பயர் கூறியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

கிரீசுக்கு வெளியே நின்றால் பிட்ச் சேதமடையும் என்று கூறுகிறீர்கள். ஒரு வேளை ஸ்பின்னர் போடும்போது பேட்ஸ்மேன் முன் இறங்கி வந்து ஆடுகிறார்கள். அப்போது மட்டும் பிட்ச் சேதமடையாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதே போல சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கும், நடுவரின் இந்த முடிவு தவறானது. இப்படி ஒரு விதிமுறை கிடையாது எனக்காட்டமாக தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, August 28, 2021, 22:40 [IST]
Other articles published on Aug 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+