For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டத்தில் மீண்டு வர வாய்ப்பு.. வீரர்களுக்கு கோலி போட்டுள்ள கட்டளை.. சூடாகுமா 2வது நாள் ஆட்டம்?

ஹெட்டிங்லி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து மீண்டு வருவதற்காக, இந்திய வீரர்களுக்கு கேப்டன் கோலி கட்டளை ஒன்றை போட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாளன்றே 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு முதல் விக்கெட் வீழ்ந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் இந்த போட்டியில் ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் வந்த புஜாரா 1 ரன்னுக்கும், விராட் கோலி 7 ரன்களுக்கும் வந்த வேகத்தில் வெளியேறினர். பார்ட்னர்ஷிப்புக்காக நீண்ட நேரம் காத்திருந்த ரோஹித் ஷர்மா, ஒரு கட்டத்தில் 19 ரன்களுக்கு வெளியேறினார். துணை கேப்டன் ரஹானேவும் 18 ரன்களுக்கு பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

இதன் பின்னர் வந்த எந்த வீரருமே இரட்டை இலக்க ரன்களை கூட அடிக்கவில்லை. ரிஷப் பந்த் 2 ரன்களுக்கு வெளியேற கடந்த போட்டியில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பும்ரா - ஷமி ஜோடி இந்த போட்டியில் டக் அவுட்டாகினர். இறுதியில் இஷாந்த் ஷர்மா 8 ரன்களும், சிராஜ் 3 ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.

மோசமான சாதனை

மோசமான சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அடிக்கும் 3வது குறைந்த ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 75 ரன்கள் அடித்ததே இந்தியாவின் குறைந்த ஸ்கோராக உள்ளது.

அசத்தல் தொடக்கம்

அசத்தல் தொடக்கம்

இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பேர்ன்ஸ் ஆகியோர் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து சிறப்பான அடித்தளம் அமைத்துள்ளனர். இந்திய வீரர்கள் திணறிய லீட்ஸ் பிட்ச்-ல், அதுவும் அதே நாளன்று இங்கிலாந்து வீரர்களூக்கு எளிதாக இருந்து. முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. 125 பந்துகளை சந்தித்த ரோரி பேர்ன்ஸ் 52 ரன்களுடனும், ஹசீப் ஹமீத் 130 பந்துகளை சந்தித்து 60 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இதன் மூலம் தற்போது வரை முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 42 ரன்கள் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.

இந்திய அணிக்கு சிக்கல்

இந்திய அணிக்கு சிக்கல்

இங்கிலாந்து அணியில் இன்னும் ஒரு விக்கெட் கூட சரியாத நிலையில் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட இங்கிலாந்து 300 ரன்கள் வரை கூட முன்னிலை வகிக்கலாம். எனவே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய பவுலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கோலி போட்ட கட்டளை

கோலி போட்ட கட்டளை

2வது நாள் போட்டிக்கான திட்டமிடுவது குறித்து ஓய்வறையில் கேப்டன் விராட் கோலி தலைமையில் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. அதில் இந்திய பவுலர்களுக்கு ஆக்ரோஷமான கட்டளைகளை கோலி கூறியுள்ளதாக தெரிகிறது. அதாவது இங்கிலாந்து அணியை முதலில் 150 ரன்களுக்குள் சுருட்டினால் தான் இந்தியா மீள முடியும் எனக்கூறப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலின் படி, 200 முதல் 230 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்டி விட வேண்டும் எனக் கோலி கூறியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்தின் விக்கெட்டுகளை வேகமாக சரிக்க வேண்டும் என சீனியர் வீரர்களான முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மாவிடம் நேரடியாகவே கோலி கட்டளையிட்டிருப்பதாக தெரிகிறது.

திட்டம் என்ன?

திட்டம் என்ன?

இங்கிலாந்தின் டாப் 3 விக்கெட்களை வீழ்த்தி விட்டால், அதன் பிறகு பேட்டிங்கில் பெரிய பலம் ஏதும் இல்லை. எனவே அடுத்து டேவிட் மாலன் மற்றும் ஜோ ரூட்டின் விக்கெட்டிற்கு மட்டும் தனி ஸ்கெட்ச்களை கோலி போட்டு வைத்துள்ளார். ஹெட்டிங்லி வானிலையை பொறுத்தவரை இன்று காலை முதலே நல்ல வெயில் அடித்து வருகிறது. எனவே வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி சுழற்பந்துவீச்சுக்காக ஜடேஜாவுக்கும் அதிக வாய்ப்புகள் தரப்படும் எனத்தெரிகிறது.

Story first published: Thursday, August 26, 2021, 18:41 [IST]
Other articles published on Aug 26, 2021
English summary
Virat Kohli makes a plans to get early wickets, can india make a come back on day 2 of 3rd test against england
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+