Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இந்தியாவுக்கு அடுத்தடுத்து சோதனை.. காயத்தால் 2 முக்கிய பவுலர்கள் விலகல்.. என்ன நடந்தது?

பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு அடுத்தடுத்து சோதனைகள் ஏற்பட்டது. இந்திய டி20 அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தொடை தசைநார் காயம் காரணமாகத் ஒரே நேரத்தில் தொடரிலிருந்து முழுமையாக விலகினர்.

பிரிஸ்டலில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இரு முக்கிய மாற்றங்களுடன் இந்திய அணி களம் இறங்கியது. காயம் காரணமாக ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி விலகியதை அடுத்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர்.

India vs England 4th T20 Harshit Rana and Varun Chakaravarthy Ruled Out from England T20 Series

ஹர்ஷித் ராணா சமீபத்தில்தான் முழங்கால் அறுவை சிகிச்சை முடிந்து சுமார் 150 நாட்களுக்குப் பிறகு அயர்லாந்து டி20 தொடரில் அணிக்கு திரும்பி இருந்தார். அவர் ஜூலை 14 முதல் தொடங்கவுள்ள ஒருநாள் தொடருக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளதால், அதற்குள் அவர் குணமடைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே போல, முந்தைய காயத்தால் அயர்லாந்து டி20 தொடரை தவறவிட்டு இங்கிலாந்து டி20 தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பிய வருண் சக்கரவர்த்தி மீண்டும் காயமடைந்து இருக்கிறார். இப்படி முக்கிய பந்துவீச்சாளர்கள் ஒரே நேரத்தில் காயம் அடைவது, அதிலும் காயத்தில் இருந்து மீண்டு வந்த தொடரில் மீண்டும் காயம் அடைவது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் பிளேயிங் 11: அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

IND vs ENG: இந்திய அணியில் 2 வீரர்கள் நீக்கம்.. உள்ளே வந்த தமிழக வீரர்.. ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் சாதனை

IND vs ENG: இந்திய அணியில் 2 வீரர்கள் நீக்கம்.. உள்ளே வந்த தமிழக வீரர்.. ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் சாதனை

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்த மைதானத்தில் கடந்த 2025 முதல் நடைபெற்ற 12 போட்டிகளில், 3 முறை மட்டுமே டாஸ் வென்ற அணிகள் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளன. ஆனால்,இந்தத் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து பின்தங்கியுள்ள நிலையிலும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த துணிச்சலான முடிவை எடுத்தார்.

Story first published: Thursday, July 9, 2026, 22:27 [IST]
Other articles published on Jul 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+