Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. கோலி போட்ட மாஸ்டர் ப்ளான்.. அதிர்ச்சியில் விழிப்பிதுங்கி நிற்கும் ஜோ ரூட்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் கோலி வகுத்த வியூகம் வெற்றியடைந்ததால், ஜோ ரூட் விழிப்பிதுங்கி நின்றுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 4வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. கடைசி நாள் ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் 101 ரன்கள் பின் தங்கியிருந்த இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 368 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது.

வலுவாக இங்கிலாந்து

வலுவாக இங்கிலாந்து

பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் இருந்ததால் இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டத்தின் போது மிகவும் நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஏற்கனவே முதல் இன்னிங்ஸின் போது டாப் ஆர்டர் சரிந்த போதும் மிடில் ஆர்டர் கை கொடுத்ததால், இங்கிலாந்து சுலபமாக இலக்கை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போலவே நேற்றைய தினம் தொடக்க வீரர்கள் ஹசிப் ஹமீது - ரோரி பேர்ன்ஸ் ஆகியோர் 50 + ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் நேற்றைய ஆட்டநேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 5ம் நாளான இன்றும் இங்கிலாந்து பலமாக களமிறங்கியது.

கோலியின் ப்ளான்

கோலியின் ப்ளான்

ஆனால் இங்கிலாந்து அணியை சுருட்ட பக்கா ப்ளானுடன் களமிறங்கினார் கேப்டன் விராட் கோலி. அதாவது இந்திய அணிக்கு நிலையாக நிலைத்து நின்று எப்போதும் குடைச்சல் கொடுப்பது இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மட்டுமே. அதுவும் இந்த போட்டியில் வெற்றி முக்கியம் என்பதால் பொறுமையாக ஆடுவார். குறிப்பாக ஒரு பார்ட்னர்ஷிப் கிடைத்தால் போது, அவரை தடுத்து நிறுத்தவே முடியாது. எனவே அவரின் விக்கெட்டை குறிவைக்காமல், அவருக்கு மறுமுணையில் இருக்கும் வீரர்களை ஒவ்வொருவராக தூக்க கோலி திட்டமிட்டார்.

பந்துவீச்சு திட்டம்

பந்துவீச்சு திட்டம்

அதன்படி மறுமுணையில் இருக்கும் வீரர்களின் பலவீனத்திற்கு ஏற்றவாறு தான் கோலி, பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து கொண்டு வந்தார். கோலியின் ப்ளான் வெற்றியும் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட்டை தவிர்த்து மறுமுணையில் இருக்கும் ஒவ்வொரு வீரராக வெளியேறி வருகின்றனர். மாலன் 5 ரன்களுக்கும், ஒல்லி போப் 2 ரன்களுக்கு அவுட்டாகினர்.

திணறும் இங்கிலாந்து

திணறும் இங்கிலாந்து

மிடில் ஆர்டரில் நம்பிக்கை வீரராக இருந்த ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி ஆகியோர் டக் அவுட்டாகினர். இதனால் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது. மீதம் இருக்கும் விக்கெட்களையும் இன்னும் எளிதாக எடுத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, September 6, 2021, 19:49 [IST]
Other articles published on Sep 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+